நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதிக்கனும்! சிறையிலுள்ள மகாராஷ்டிரா அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறையில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோரும் தாங்களையும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Recommended Video
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராகவும், தலைமையின் உத்தரவை மீறி கூட்டத்தை புறக்கணித்த 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தடை
இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் அனுப்பி வைத்த தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, துணை சபாநாயகர், சட்டசபை செயலர் உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் அதுவரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

ஆளுநர் உத்தரவு
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து கடந்த 26 ஆம் தேதி குணமடைந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். இந்த நிலையில் நேற்று டெல்லி சென்றுவிட்டு மும்பை திரும்பிய பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் அவர் அரசுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் நாளை (ஜூன் 30) மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

சிறையில் இருக்கும் எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதற்கு முன்பாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க அனுமதிகோரிய மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications