நடிகை ஜான்வி கபூரின் பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் இல்லை.. ஸ்ரீதேவியின் ஆர்டராம்! மயிலு ரொம்ப ஸ்டிரிக்டோ
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் வீட்டு கழிப்பறைக்கு தாழ்ப்பாள் இல்லை என்ற தகவல் குறித்தும் அந்த தாழ்ப்பாளை பொருத்துவதற்கு ஸ்ரீதேவி மறுத்தார் என்றும் ஜான்வி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகில் நடித்தவர் ஸ்ரீதேவி. தமிழகத்தின் சிவகாசியை சேர்ந்த ஸ்ரீதேவி எம்ஜிஆர், சிவாஜி, கிருஷ்ணா, நந்தமுரி பாலகிருஷ்ணன், ரஜினி, கமல், விஜய், அஜித், சிரஞ்சீவ், மோகன்லால், மம்மூட்டி, அமிதாப் பச்சன், தேவேந்திரா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக அஜித்துடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 80 களில் பலரது கனவுக் கன்னியாக இருந்தவர். திருமணத்திற்கு பெண் எப்படி வேண்டும் என கேட்டாலே ஸ்ரீதேவி மாதிரி வேண்டும் என அந்த காலத்து ஆண்கள் சொல்வார்களாம்.

தென்னிந்தியா
தென்னிந்தியாவில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி வடஇந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

திருமண விழா
ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற போது திடீரென மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சென்னையில் தனது தாய் வாங்கிய பங்களாவை சுற்றிக் காட்டும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜான்வி வீடியோ
வீட்டு வாசலில் இருந்து அந்த வீடியோவை காட்டும் ஜான்வி முதலில் தனது தந்தை போனி கபூரின் அலுவலகத்தை காட்டுகிறார். சென்னையில் போனி கபூரின் அலுவலகம் அந்த அறையில்தான் செயல்படுகிறதாம். தனது தாய் திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கியதாகவும் ஜான்வி கூறுகிறார். அது போல் நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியங்களையும் அவர் காட்டுகிறார்.

குடும்ப புகைப்படங்கள்
குடும்ப புகைப்படங்களையும் காட்டும் அவர், தனது தாய் பார்த்து பார்த்து இந்த பங்களாவை கட்டியதாக கூறுகிறார். அந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவியின் திருமண புகைப்படமும் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவி பதற்றமாக இருக்கிறார். அதனால் இது ரகசிய திருமணமாக இருக்கலாம் என ஜான்வி கூறிவிட்டு சிரிக்கிறார். பின்னர் மாடியில் உள்ள தனது அறையை காட்டும் ஜான்வி, அங்கு ஒரு ரகசிய அறை இருப்பதாக கூறுகிறார். மேலும் அதில் என்ன இருக்கிறது என தனக்கு தெரியாது என்றும் கூறுகிறார்.

தாழ்ப்பாள் இல்லை
மொட்டை மாடியில் உள்ள ஜிம்மை காட்டும் ஜான்வி, கடைசியாக அந்த வீட்டில் தனக்கு பிடித்தமான டாய்லெட்டை காட்டுகிறார். அதில் தனது அறையில் உள்ள பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் கிடையாது என கூறுகிறார். பாத்ரூமிற்கு சென்று நான் எந்த பையனுடனாவது பேசிவிடுவேனோ என்ற அச்சத்தில் தாழ்ப்பாள் போடவில்லை. அம்மா மறைந்த பிறகு அப்பா இந்த வீட்டை புதுப்பித்தார். அப்போது கூட எனது பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் பொருத்தவில்லை என கூறுகிறார். இதை பார்க்கும் நெட்டிசன்கள், மயிலு ரொம்பதான் ஸ்டிரிக்ட் போல என்கிறார்கள். பாந்த்ராவில் 65 கோடி ரூபாயில் டூப்லஸ் வீட்டை ஜான்விக்கு போனியும் ஸ்ரீதேவியும் பரிசாக கொடுத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications