சாதியை சொல்லி கேவலப்படுத்திய சீனியர் பெண் மிருகங்கள்.. வேதனையில் தற்கொலை செய்த ஜூனியர் டாக்டர்
மும்பை: இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ இடம் பெற்ற பழங்குடியின மருத்துவ மாணவி ஒருவரை, 3 பெண் மிருகங்கள் (மருத்துவர்கள்) வார்த்தைகளால் சித்ரவதை செய்ததால் அந்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்த கொடூரத்தில் தொடர்புடைய, 3 பெண் மிருகங்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாயல் சல்மான் தாத்வி என்ற 26 வயது பழங்குடியினத்தை சேர்ந்த மருத்துவ மாணவி தான் தற்கொலை செய்து கொண்டுள்ளவர். முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்ந்த இவரை, இவரது சாதியை சொல்லியும், இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வந்ததை சுட்டிக்காட்டியும் 3 பெண் மிருகங்கள் மிக தரக்குறைவாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சீனியர்களான ஹேமா ஆஜா, பக்டி மேகர் மற்றும் அங்கிதா கண்டலிவால் இந்த மூன்று மிருகங்களும் தான் தாத்வியின் சாதியை குறிப்பிட்டு கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வாட்ஸ் அப் குரூப்பிலும் குறிப்பிட்ட மாணவியின் சாதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து அவர்கள் பதிவிட்டு விமர்சித்துள்ளனர்
இதனால் கடும் வேதனைக்கும் மனஉசைச்சலுக்கும் ஆளான அந்த பழங்குடியின மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தாத்வியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்
இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அந்த மாணவியின் தாய் தற்கொலை செய்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தாத்வி என்னிடம் போனில் பேசினாள். அப்போதுதமக்கு 3 பெண் மருத்துவர்கள்( மிருகங்கள்) தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாகவும் கூறி அழுதாள் என்றார்
பெற்றோரின் புகாரையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான 3 பெண் மிருகங்களிடமும், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications