Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியே போச்சு! வீடு புகுந்து அடிச்சிடுவேன் பாத்துக்கோங்க! பிரபல நடிகரை மிரட்டிய கங்கனா ரனாவத்

வீடு புகுந்து தாக்குவேன் என பிரபல நடிகருக்கு கங்கனா மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: வீடு புகுந்து அடிப்பேன் என பிரபல நடிகருக்கு நடிகை கங்கனா ரனாவத் மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். மேலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நடிகை.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்களை அவதூறாக பேசியிருந்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அப்போது கங்கனா கண்டனத்திற்குரிய கருத்தை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காலிஸ்தானி பயங்கரவாதிகள் அரசை தங்களுக்கு ஏற்றபடி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களை போல தன் உயிரை பணயம் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகளை நசுக்கினார்.

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள்

அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறரும் கூட இன்றும் அவரது பெயரை கேட்டாலே காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடுங்குகிறார்கள். அவரை போன்றதொரு நபர்தான் தற்போது தேவை என பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சைக் கருத்துக்கு எதிராக கங்கனா ரனாவத் மீது டெல்லி மந்திர் மார்க் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

 கங்கனா ரனாவத் பதிவு

கங்கனா ரனாவத் பதிவு

கங்கனா ரனாவத்தின் இந்த பதிவிற்கு சீக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து கங்கனாவின் இந்த பதிவு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறி டெல்லியில் இயங்கி வரும் சீக்கிய அமைப்பான குருத்வாரா மேலாண்மை கமிட்டி சார்பில் கங்கனா மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனது மனைவியை பெரிய நடிகையாக்க தன்னை வேவு பார்க்கிறார் என கங்கனா குற்றம்சாட்டினார்.

பால்கனி, மொட்டை மாடி

பால்கனி, மொட்டை மாடி

தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனி, மொட்டை மாடி என எங்கு சென்றாலும் தன்னை ஜூம் லென்ஸ் செய்து வேவு பாரப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நடிகர் பெயரையும், மனைவி பெயரையும் கங்கனா வெளியிடவில்லை. womaniser and casonava husband என குறிப்பிட்டுள்ளார். கங்கனாவின் இந்த குற்றச்சாட்டுகள் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கேமராக்கள்

கேமராக்கள்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னை பற்றி கவலைப்படுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அதாவது நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை. கேமராக்கள் மற்றும் கேமராக்கள் இல்லாமல் யாரும் என்னை பின்தொடரவில்லை. சொற்களால் புரிந்து கொள்ளாதவர்களுக்கு விஷயங்களை புரிய வைக்க வேறு வழி தேவை.

தாக்குவேன்

தாக்குவேன்

சரியாக இருந்து கொள்ளுங்கள் என நான் எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால் நான் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களை தாக்குவேன். என்னை பைத்தியம் என அழைப்பவர்களுக்கு கூட நான் எந்த அளவிற்கு செல்வேன் என்பது தெரியவில்லை. தனது பதிவில் ஒரு வாள் எமோஜியையும் கங்கனா போட்டுள்ளார். மேலும் நான் 6.30 மணிக்கு எழுகிறேன் என்பது அவர்களுக்கு எப்படி தெரிகிறது என தெரியவில்லை. எனது வாட்ஸ் ஆப் தகவல்கள் லீக்காகின்றன. கணவர்தான் இப்படி வேவு பார்க்கிறார் என்றால் அந்த பழக்கத்தை மனைவி ஊக்குவிக்கிறார்.

சகோதரரின் திருமண வரவேற்பு

சகோதரரின் திருமண வரவேற்பு

எனது சகோதரரின் திருமண வரவேற்பிற்கு நான் என்ன சேலை அணிந்திருந்தேனோ அதே மாதிரியான சேலையை அந்த நடிகரின் மனைவி தன்னுடயை திருமணத்திற்கு அணிந்திருந்தார். எனக்கு 10 ஆண்டுகளாக நன்கு பழக்கத்தில் உள்ள ஆடை வடிவமைப்பாளர் அந்த நடிகருக்கும் அவரது மனைவிக்கும் தற்போது பணியாற்றி வருகிறார். எனது பைனான்சியர்கள், பிசினஸ் பார்ட்னர்கள் என எல்லாருமே கடைசி நேரத்தில் எந்த ஒரு காரணத்தையும் சொல்லாமல் என்னுடனான ஒப்பந்தங்களை கேன்சல் செய்கிறார்கள்.

கெட்ட பெயர் சிக்கல்

கெட்ட பெயர் சிக்கல்

நான் நினைக்கிறேன் என்னை தனிமைப்படுத்தி, எனக்கு மனரீதியிலான பிரச்சினைகளை கொடுக்க வேண்டும் என அந்த நடிகர் விரும்புகிறாரோ என்னவோ, எனது அடுக்குமாடி குடியிருப்பில் வேறு தளத்தில் வசிக்கும் அந்த நடிகரை மனைவி கண்டிக்காவிட்டால் கடைசியில் பிரச்சினை என வந்தால் அவரும் அவரது குழந்தையும்தான் சிக்கலில் நிற்பர். இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+