ஊர்மிளாவை நடிப்புத் திறமையால் யாருக்கும் தெரியாது.. அவர் ஒரு ஆபாச நடிகை.. கங்கனா கடும் பாய்ச்சல்
மும்பை: நடிகை ஊர்மிளா மடோன்கர் ஒரு ஆபாச நடிகை என சக நடிகையான கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாலிவுட்டில் போதை பொருள் புழக்கம் அனைத்து பார்ட்டிகளிலும் தாராளமாக இருப்பதாக கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியதை அடுத்து ஊர்மிளா மடோன்கர் கங்கனாவை கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு தண்ணீரிலும் உணவிலும் அவருக்குத் தெரியாமலேயே போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாக சுஷாந்தின் தந்தை, ரியா மீது குற்றம்சாட்டினார். அப்போது அவரது கருத்துக்கு கங்கனாவும் ஆதரவளித்தார்.

மும்பை போதை பொருள்
இதுகுறித்து கங்கனா கூறுகையில் பாலிவுட் மற்றும் மும்பையில் போதை பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை. பெரிய பிரபலங்களின் வீட்டு பார்ட்டிகளில் விலை மதிப்புள்ள போதை மருந்துகள் இலவசமாகவே கிடைக்கும். பிரதமரின் தூய்மை இந்தியா போல் மும்பையில் இந்த போதை பொருள் அச்சுறுத்தல் சாக்கடையை ஒழிக்க வேண்டும் என கங்கனா தெரிவித்திருந்தார்.

கங்கனா
இதற்கு ஊர்மிளா கடும் கண்டனம் தெரிவித்தார். ஊர்மிளா கூறுகையில் மும்பை குறித்து கங்கனா கூறிய கருத்துகள் அனைத்தையும் ஏற்க முடியாது. போதை பொருளின் பிறப்பிடமே ஹிமாச்சல் பிரதேசம்தான். அங்கிருந்து போதை பொருளை ஒழிக்க ஏன் நாம் போராடக் கூடாது என ஊர்மிளா கேள்வி எழுப்பியிருந்தார்.

ஊர்மிளா
இதற்கு கங்கனா தற்போது உரிய பதிலடியை கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் ஊர்மிளா மடோன்கரால் மிகவும் அவதூறான கருத்துகளை தெரிவித்திருப்பதை கண்டேன். பாஜகவில் போட்டியிட நான் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் குறித்தெல்லாம் பேசியதாக ஊர்மிளா தெரிவித்துள்ளார். நான் யார் என்பதை கண்டுபிடிக்க ஒருவர் மேதையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

சுலபம்
தேர்தலில் வாய்ப்பு பெறுவது மிகவும் சுலபமானது. ஊர்மிளா ஒரு ஆபாச நடிகை. அவரது நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது. அது எனக்கு உறுதியாக தெரியும். அவர் எதற்கு பெயர் போனவர் தெரியுமா, ஆபாசங்களை செய்யவே. அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு ஏன் கிடைக்காது என கங்கனா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications