ஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. வடிவேல் பட காமெடி போல் ஆன கங்கனா ட்வீட்
மும்பை: சுபாஷ், ஜான்சிராணி போல் நானும் விரைவில் சிறைக்கு செல்கிறேன் என நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மும்பை போலீஸ் சரியான விசாரணை நடத்தவில்லை என்றும் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கங்கனா ரனாவத் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
அது போல் மகாராஷ்டிர அரசையும் அவர் கண்டித்தார். இந்த நிலையில் கங்கனா ரனாவத் சட்டவிரோதமாக கட்டடம் கட்டியதாக அவரது அலுவலகத்தை இடிக்க மும்பை மாநகராட்சி இடிக்க முற்பட்டது.

அலுவலகம்
அப்போது நடிகை கங்கனா, மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என கூறி மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்படுவதிலிருந்து தடை வாங்கினார். இதையடுத்து அவருக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது.

குற்றவியல் வழக்கு
பின்னர் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக ட்விட்டரில் தொடர் கருத்துகளை பதிவிட்டுக் கொண்டே இருந்தார். மகாராஷ்டிரா அரசு அழிவதற்கு நாள் நெருங்கிவிட்டது என்றெல்லாம் கூறினார். இந்த நிலையில் கங்கனா வெறுப்பு பேச்சை பரப்புவதாக மும்பை போலீஸார் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

நம்பிக்கை
இதுகுறித்து நடிகை கங்கனா தனது ட்விட்டரில் கூறுகையில் வீர சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்களை போல் என்னையும் சிறையில் அடைக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இது எனக்கு நம்பிக்கையை தருகிறது.

அர்த்தம்
சிறைக்கு செல்ல நான் காத்திருக்கிறேன். அவர்கள் அடைந்த அதே துன்பங்களை அடைய விரும்புகிறேன். அது எனது வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கும். ஜெய் ஹிந்த் என தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா குறிப்பிட்டுள்ளார். இதை பார்க்கும் போது வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஏ நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், நானும் ரவுடிதான் என்பார். அதை போல் இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications