ராவணன் கடத்தி சென்றபோது சீதை அணிந்திருந்த உடையின் நிறம் என்ன? கவுன் பனேகா குரோர்பதியில் கேட்ட கேள்வி
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ராமாயணம் தொடர்பான 8 கேள்விகள் கேட்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு விடை தெரியாமல் விழித்தனர்.
கவுன் பனேகா குரோர்பதி எனும் வினா விடை நிகழ்ச்சியானது கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் பிளஸ் சேனலில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இது 15 சீசன்களை கடந்த 16 ஆவது சீசன் நடந்து வருகிறது. கடந்த 4 ஆவது சீசன் முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை 1,230 எபிசோடுகள் சென்றுள்ளன. இத்தனை எபிசோடுகளில் பெரும்பாலானோர் அதிகபட்சமாக ரூ 50 லட்சத்தை வென்றுள்ளனர். ஆனால் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சீசனில் ஹர்ஷ்வர்தன் நவதே என்பவர் ரூ 1 கோடியை வென்றார். அது போல் விஜய் ரவுல், அருந்ததி, ரவி மோகன் சைனி உள்ளிட்டோரும் ரூ 1 கோடியை வென்றுள்ளனர்.
அது போல் சீசன் 5 நிகழ்ச்சியில் பீகாரை சேர்ந்த சுஷில் குமார் என்பவர் ரூ 5 கோடி பரிசு பெற்றார். இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கணினி பணியாளராக மாதத்திற்கு ரூ 6000 சம்பாதித்து வந்தவர். அது போல் சீசன் 6 நிகழ்ச்சியில் சன்மீத் கவுர் சவுனி ரூ 5 கோடியை வென்றார்.
சீசன் 8 நிகழ்ச்சியில் அசின் மற்றும் சர்தாக் நரூலா ரூ 7 கோடியை வென்றனர். குறிப்பிட்ட இந்த சீசன்களில் மட்டும் பரிசு தொகை அதிகரித்திருந்தது. தற்போது நடந்து வரும் சீசன் 16 இல் ராமாயணம் குறித்த 8 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு பதில் தெரியாமல் போட்டியாளர்கள் பலர் விழித்தனர்.
அந்த கேள்விகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
1. பின்வருவனவற்றுள் எது வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதி இல்லை
a) சுந்தர் காண்டம்
b) வனவாச காண்டம்
c) யுத்த காண்டம்
d) கிஷ்கிந்தா காண்டம்
2. சீதையை கடத்திச் சென்ற போது அவர் என்ன உடை அணிந்திருந்தார். அதே உடையைத்தான் அனுமன், அசோக வனத்திற்கு சென்ற போதும் சீதை அணிந்திருந்தார்?
a) சிவப்பு
b) மஞ்சள்
c) பிங்க்
d) நீலம்
3. இலங்கையில் சீதை சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் செய்தியை அனுமனுக்கு சொன்ன பறவை எது?
a) கருடன்
b) சம்பதி
c) ஜடாயு
d) ப்ரபு
4. ராமாயணத்தில் ராவணனின் வாளுக்கு பெயர் என்ன?
a) சந்திரஹாஸ்
b) ஷராங்
c) போண்டு
d) மனுபுஷ்பக்
5. தலையில் சீதை அணிந்திருந்த தெய்வீக அணிகலன் எது?
a) கவுஸ்துப மணி
b) ஷியாமந்தக மணி
c) சூடாமணி
d) நாகமணி
6. ராமாயணத்தில் மேகநாத்தும் அக்ஷய் குமாரும் யாருடைய மகன்கள்?
a) ரூமா
b) சுலோசனா
c) மண்டோதரி
d) அமிரித் பிரபா
7. அசோக வனத்தில் சீதையை சந்தித்த அனுமன், ராமர் குறித்து எங்கிருந்து கூறினார்?
a) சப்தபதி
b) ஷிம்ஷபா
c) அர்ஜுன்
d) கர்னிகர்
8. ராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரம், மகாபாரதத்திலும் வருகிறார், யார் அவர்?
a) அனுமன்
b) வேதவியாசர்
c) தசரதன்
d) துரியோதனா
இந்த கேள்விகளுக்கு விடை தெரியுமா. இல்லாவிட்டால் கீழே கொடுத்துள்ளோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. வனவாச காண்டம்
2. மஞ்சள்
3. சம்பதி
4. சந்திரஹாஸ்
5. சூடாமணி
6. மண்டோதரி
7. ஷிம்ஷபா
8. அனுமன்


Click it and Unblock the Notifications
