எப்படி இருக்கிறார் லதா மங்கேஷ்கர்.. முக்கிய அப்டேட் கொடுத்த ஆஷா போஸ்லே.. நிம்மதியடைந்த ரசிகர்கள்
மும்பை : பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறி இருப்பதாக அவரது சகோதரியும் பிரபல பாடகியுமான ஆஷா போஸ்லே கூறியுள்ளார்
பிரபலா பாடகியான லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா மற்றும் நிமோனியா உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 8ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாடகி லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தேறி விட்டதாகவும், வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர்கள் கூறி இருந்தனர். ஆக்சிஜன் மட்டுள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்த நிலையில் இன்று லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

தீவிர சிகிச்சை
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல நாட்களாக ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. படிப்படியாக தேறி வந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை இன்று மீண்டும் மோசமடைந்துள்ளது எனவும், இதன் காரணமாக மீண்டும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியானது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

சகோதரி ஆஷா போஸ்லே
இந்நிலையில் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பிரதித் சம்தானி பாடகி லதா மங்கேஷ்கர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகள் அவர் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதாக செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் தீவிர சிகிசை பெற்றும் வரும் லதாவை, அவரது சகோதரியும் பிரபல பாடகியுமான ஆஷா போஸ்லே மருத்துவமனையில் சந்தித்தார்.

லதா நலமுடன் உள்ளார்
தொடர்ந்து மருத்துவர்களிடம் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். வீட்டுக்குப் புறப்பட்ட ஆஷா போஸ்லே விடும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளதாக தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications