சல்மான் கான் மட்டுமில்லை.. மொத்தம் 6 பிரபலங்கள் குறி! சர்வதேச அளவில் இயங்கும் பிஷ்னோய் கேங்! பின்னணி
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல்வாதி பாபா சித்திக்கை கடந்த சனிக்கிழமை லாரன்ஸ் பிஷ்னோய் கேங் சுட்டுக் கொன்றது. சிறையில் இருந்தாலும் கூட லாரன்ஸ், வெளியே இருக்கும் தனது கூட்டாளி கோல்டி ப்ரர் என்பவருடன் இணைந்து குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங் குறிவைத்த 6 பிரபலங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
லாரன்ஸ் பிஷ்னோய் கேங் இப்போது குஜராத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும் கூட அவர் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக இந்தியா மட்டுமின்றி கனடாவிலும் கூட இந்த கேங் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பிஷ்னோய் கேங் கடந்த சில ஆண்டுகளில் 6 பிரபலங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பாபா சித்திக்: கடந்த சனிக்கிழமை இவர் தனது மகனின் எம்எல்ஏ அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அவரை இந்த கேங்கை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றனர். தங்களுக்கு யார் உடனும் அரசியல் ரீதியாகப் பகை இல்லை என்ற போதும் சல்மான் கான் அல்லது தாவூத் கேங்கிற்கு உதவுவோர் கொல்லப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இந்தளவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிஷ்னோய் கேங் கடந்த 1998ம் ஆண்டு முதலே சல்மான் கானை குறிவைத்து வருகிறது. அந்த சமயத்தில் அவர் அரிய வகை கலைமானை வெட்டையாடியதாக சொல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலைமானை பிஷ்னோய் மக்கள் கடவுளாக வழிபடுவார்கள். இதன் காரணமாகவே சல்மான் கானை பிஷ்னோய் கேங் குறிவைத்து வருகிறது. முன்னதாக சல்மான் கானை கொலை செய்யும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் அவரது வீட்டில் இந்த கேங் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மற்றொரு பஞ்சாபி பாடகர் ஏபி தில்லான். இவரும் சல்மான் கான் உடனான தொடர்பாக டார்கெட் செய்யப்பட்டவர்.. இவர் சல்மான் கானுடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியதால் பிஷ்னோய் கேங் இவரைக் கொல்ல முயன்றது. கடந்த 2024 செப். 1ம் தேதி கனடாவின் வான்கூவரில் உள்ள ஏபி தில்லானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிஷ்னோய் கேங் இவருக்குப் பகிரங்க மிரட்டலையும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாபா சித்திக் போலவே சல்மான் கானுடன் நல்லுறவைக் கொண்டிருந்த பஞ்சாபி பாடகர் ஜிப்பி கிரேவால் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்தது. கடந்த 2023 நவம்பர் மாதம், கனடாவின் வான்கூவரில் உள்ள கிரேவால் வீட்டில் பிஷ்னோய் கேங் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் கிரேவாலுக்கு எதுவும் ஆகவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற பிஷ்னோய் கேங், "நீங்கள் சல்மான் கானை ஒரு சகோதரனாகக் கருதுகிறீர்கள். எனவே, இப்போது உங்கள் 'சகோதரன்' வந்து உங்களைக் காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் எங்கள் ரேடாரில் வந்துவிட்டீர்கள். நீங்கள் எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்லுங்கள்.. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. மரணத்திற்கு விசா தேவையில்லை" என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.
அடுத்து மற்றொரு பஞ்சாபி பாடகர் ஏபி தில்லான். இவரும் சல்மான் கான் உடனான தொடர்பாக டார்கெட் செய்யப்பட்டவர்.. இவர் சல்மான் கானுடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியதால் பிஷ்னோய் கேங் இவரைக் கொல்ல முயன்றது. கடந்த 2024 செப். 1ம் தேதி கனனாவின் வான்கூவரில் உள்ள ஏபி தில்லானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பிஷ்னோய் கேங் இவருக்குப் பகிரங்க மிரட்டலையும் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 டிசம்பர் மாதம் சுக்தேவ் சிங் கோகமேடி என்ற முக்கிய இந்துத் தலைவரை இந்த பிஷ்னோய் கேங் கொன்றது. பிறகு அவர்கள் தங்கள் பேஸ்புக்கில், "எங்கள் எதிரிக்கு உவர் உதவினார். அவர்களைப் பலப்படுத்துகிறார்கள். அதற்கான விலையைக் கொடுக்கிறார். அடுத்து எதிரிகளே தயாராக இருங்கள். உங்களை நோக்கி வருகிறோம்" என்று பதிவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications