ரூ.80 கோடி மதிப்பு.. 150 ஏக்கர்! மலைக்க வைக்கும் சல்மான் கானின் பண்ணை வீடு! உள்ளே இத்தனை வசதிகளா?
மும்பை: பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சல்மான் கானுக்கு சொந்தமாக மகாராஷ்டிரா மாநிலம் பான்வெலில் அமைந்து இருக்கும் மிகப்பெரிய பண்ணை வீட்டில் இருக்கும் வசதிகள் பார்ப்போரை பிரமிக்க செய்து வருகிறது. அதில் உள்ள வசதிகள் என்ன? அதன் மதிப்பு என்ன? விரிவாக பார்ப்போம்.
"கேலக்சி அபார்ட்மெண்ட், மும்பை." மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இந்த சிறிய முகவரியை எந்த ஆட்டோ, டாக்சி ஓட்டுநரிடம் சொன்னாலும் உடனே வரும் பதில் சல்மான் கான் வீட்டுக்கு போக வேண்டுமா என்று. பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் சல்மான் கான் இந்த முகவரி மும்பையின் ஒரு அடையாளமாகவே உள்ளது.

இந்த கட்டிடத்தில்தான் சல்மான் கான் தனது ஒட்டுமொத்த குடும்பத்துடனும் வசித்து வருகிறார். ஆனால், இதற்கு இணையாக சல்மான் கான் அதிகம் நேசிக்கும் அவரது வீடு மும்பைக்கு வெளியில் உள்ளது. அது மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள பான்வெல் என்ற நகரில் அமைந்து இருக்கும் ஒரு பண்ணை வீடு.
மும்பையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள பான்வெல் நகரில் இருக்கும் இந்த பண்ணை வீட்டில் சல்மான் கான், ஓய்வு காலங்களில் தனியாகவும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுவார் என்று கூறப்படுகிறது. சல்மான் கான் தன்னுடைய இந்த பண்ணை வீட்டுக்கு தன்னுடைய சகோதரி அர்பிதா கானின் பெயரான அர்பிதா ஃபார்ம்ஸ் என்று வைத்து இருக்கிறார்.

அண்மையில் அவரது "கிசி கா பார் கிசி கி ஜான்" படம் வெளியான பிறகு அந்த பண்ணை வீட்டில் உள்ள நீச்சள் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணை வீட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதற்குள் 3 அரண்மனை வடிவ பங்களாக்கள், மிகப்பெரிய நீச்சள் குளம், உடற்பயிற்சி கூடம் போன்றவை உள்ளன.
குதிரைகளின் மீது அதிக பிரியம் கொண்ட சல்மான் கான் இந்த பண்ணை வீட்டில் அதிக குதிரைகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனி குதிரை லாயமும் உள்ளே இருக்கிறது. அத்துடன் குதிரை சவாரி செய்வதற்காகவும் பண்ணை வீட்டில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாம். அத்துடன் தனது பண்ணை வீட்டில் சல்மான் கான் இயற்கை விவசாயமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதல் கொரோனா அலையின்போது ஊரடங்கு காலத்தில் அவர் இயற்கை விவசாயம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். பச்சை பசேலென, மரங்களால் சூழப்பட்ட, பரந்து விரிந்த இந்த பண்ணை வீட்டின் தற்போது நிலம் மற்றும் உள்ளே இருக்கும் வசதிகளை வைத்து கணக்கிட்டால் அதன் மொத்த மதிப்பு ரூ.80 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications