மலைபோல மகாராஷ்டிராவை நம்பிய பாஜக.. மண் அள்ளிப் போடுதே Lok Poll கருத்து கணிப்பு!
மும்பை: லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20 ஆகிய 5 கட்டங்களாக மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை "இந்தியா" கூட்டணியில் உள்ளன.
ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிபிஎம், குடியரசு கட்சி (அத்வாலே), குடியரசுக் கட்சி, சிபிஐ, பீம் சேனா உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.
மகாராஷ்டிரா லோக்சபா தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்திருந்தன.
கருத்து கணிப்புகளின் முடிவுகள்
India TV-CNX
பாஜக அணி 37
"இந்தியா" கூட்டணி 10
ABP News-CVoter
பாஜக அணி 28
இந்தியா கூட்டணி 20
India Today-CVoter
பாஜக அணி 22
இந்தியா கூட்டணி 26
இந்த வரிசையில் Lok Poll நிறுவனம் மகாராஷ்டிரா கள நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

Lok Poll கருத்து கணிப்பு
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 21 - 24
காங்கிரஸின் இந்தியா கூட்டணி 23 - 26
இதர கட்சிகள் 0 - 1
அதே நேரத்தில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக தனிப்பட்ட முறையில் அதிகமான இடங்களைக் கைப்பற்றும். பாஜகவுக்கு 14 முதல் 17 இடங்கள் கிடைக்குமாம். அதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தங்களது வாக்குகளை பாஜகவுக்கு பெற்றுத் தர முடியாமல் போகிறதாம்.
காங்கிரஸ் கட்சிக்கு 9 முதல் 12 இடங்கள் கிடைக்குமாம். விவசாயிகள் பிரச்சனை தலை தூக்கி நிற்கும் விதர்பா பிராந்தியத்தில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்யுமாம். முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும் மராத்தா இடஒதுக்கீடு விவகாரமும் "இந்தியா" கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications