பாஜகவுக்கு பெரும் ஏமாற்றம்- மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் "வெற்றிகரமாக" தொகுதி பங்கீடு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் "இந்திய" கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத கட்சிகளிடையே சுமூகமான தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொடக்கத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது.

Lok Sabha Election 2024: I.N.D.I.A bloc Seat-sharing deal finalised in Maharashtra

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆதி- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எடப்படவில்லை. இதனால் "இந்தியா" கூட்டணியே சிதறிப் போகும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் இடையே வெற்றிகரமாக தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. இதேபோல உத்தரப்பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டு கட்சி- மக்கள் ஜனநாயகக் கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 48 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவிலும் "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 18, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் போட்டியிடும் என பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இதர சிறிய கட்சிகளுக்கு 3 கட்சிகளுமே தங்களது தொகுதிகளை பங்கிட்டு தருவது எனவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 2019 லோக்சபா தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. அத்தேர்தலில் சிவசேனா 23.5% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில்தான் வென்றது. அத்தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 16.41%. சரத்பவாரின் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி மொத்தம் 19 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 15.66% வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+