மகாராஷ்டிராவில் கல்வி அமைச்சராகிறாரா ஆதித்யா தாக்கரே?
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவின் புதிய அரசில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, கல்வி அமைச்சராகக் கூடும் என்கின்றன மும்பை தகவல்கள்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதமாக நீடித்த முட்டுக்கட்டை முடிவுக்கு வருகிறது. சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைக்க உள்ளன.

இது தொடர்பாக மூன்று கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் புதிய அரசு அமைவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
மேலும் முதல்வர் பதவி சிவசேனாவுக்கு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கல்வி அமைச்சராகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது மும்பையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications