உடனே எஸ்கேப்பாகி தம்பி வீட்டிற்கு சென்ற அஜித் பவார்.. மகனுடன் திடீர் சந்திப்பு.. நலம் விசாரிப்பு!
மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது அஜித் பவார் தன்னுடைய மகன் பார்த் பவார் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது அஜித் பவார் தன்னுடைய மகன் பார்த் பவார் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் இன்று அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. அங்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பாஜகவிற்கு அங்கு போதுமான பெரும்பான்மை இல்லை.
இதனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்.

தவிர்க்க முடிவு
பதவியை ராஜினாமா செய்தவுடன் அஜித் பவார் உடனடியாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தன்னுடைய தம்பி வீட்டிற்கு சென்றார். மும்பையில் நெபென்சீ பகுதியில் இருக்கும் தன்னுடைய தம்பி வீட்டிற்கு சென்றார். பாஜக தலைவர்களை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் அவர் அங்கு சென்றார்.

ராஜினாமா செய்தார்
அஜித் பவாரின் ராஜினாமாவை தொடர்ந்து அவரிடம் சரத் பவாரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கால் செய்து பேசி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அஜித் பவாரை தொடர்பு கொள்ள முயன்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுடன் அஜித் பவார் பேசி இருக்கிறார்.

பேசி வருகிறார்கள்
அதேபோல் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது அஜித் பவார் தன்னுடைய மகன் பார்த் பவார் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தன்னுடைய தம்பி வீட்டிலேயே அவர் இந்த சந்திப்பை நடத்தினார். இவர்கள் இன்னமும் அங்கு பேசி வருகிறார்கள். இதில் சரத் பவார் குறித்து அஜித் பவார் விசாரித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள்
அதேபோல் இதில் குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள். கட்சி தொண்டர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் அஜித் பவார் மகனிடம் விசாரித்துள்ளார். இதனால் அஜித் பவார் சமாதானத்திற்கு தயாராகிவிட்டார். விரைவில் அவர் சரத் பவாருடன் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications