மகாராஷ்டிராவில் மீண்டும் மகுடம் சூடும் பாஜக கூட்டணி.. காங்கிரஸ் கூட்டணிக்கு பலத்த அடி.. ஏபிபி கணிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 150-170 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி - matrize வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதேபோல் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 110-130 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 8-10 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

maharashtra assembly election 2024 jharkhand assembly electio 2024 by poll election 2024 2024 2024

மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.

முந்தைய தேர்தல் வரலாறு: மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.

ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.

கணிப்பு: இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 150-170 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 145 இடங்கள் போதும். அப்படி இருக்க பாஜகவின் என்டிஏ கூட்டணி 5 இடங்களை கூடுதலாக பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 110-130 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கூட்டணி மாறும். மற்றவை 8-10 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+