மகாராஷ்டிரா: முதல்வர் வேட்பாளர்- சிவசேனாவை சீண்டிய சரத்பவார்! கோரஸ் பாடும் காங்கிரஸ்! பாஜக ஹேப்பி!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சிவேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்திருப்பது பாஜக கூட்டணிக்கு நிம்மதி கொடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என சரத்பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருப்பது அந்த கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராகத் தொடங்கிவிட்டன.

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம் அல்லது அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்பது களநிலவரம்.
இன்னொரு பக்கம் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலைமை உள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே முன்னிறுத்தப்பட வேண்டும்; முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். அதனால் மீண்டும் உத்தவ் தாக்கரேவையே முதல்வர் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஏற்க வேண்டும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், முதல்வர் வேட்பாளராக ஒருவரை மட்டுமே முன்னிறுத்த முடியாது; அனைவருமே முதல்வர் வேட்பாளராக கருதப்பட வேண்டும். கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்தே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என சரத்பவார் கூறியிருக்கிறார். இதனையே காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தி இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இது பாஜக கூட்டணிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 13 இடங்களில் வென்றது; சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 9 இடங்கள் கிடைத்தன. இதனால் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications