மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் "விசிக".. எத்தனை தொகுதிகளில் போட்டி தெரியுமா?
மும்பை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளர். ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் கட்சியுடன் விசிக களமிறங்க இருப்பதாகவும், இதர தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது.

தற்போது, சிவசேனா + பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சி உடைந்ததற்கு பாஜகவே காரணம் என்றும் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் விமர்சித்து வருகிறார்கள். வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால், மகாராஷ்டிரா தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.
நாட்டின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றாகவும், நிதி தலைநகரான மும்பையை கொண்டு இருப்பதாலும் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுக்க எற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர். இதனால், தமிழர்களின் வாக்குகளை பெறவும் அங்குள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூடடணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும், 10 சட்டமன்ற தொகுதிகளில் விசிக வேட்பாளர்களை நிறுத்தும் என்று அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம். கங்காபூர், பத்நாபூர், நாந்தெட் (தெற்கு), ஹிங்கோலி, கல்மனுரி, வாஸ்மாட், தெக்லூர் அவுரங்கபாத், (மையம்), முல்லுண்டு (மும்பை), கன்னட் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிட உள்ளது" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications