மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்: சிவசேனா- காங்கிரஸ்-என்சிபி கூட்டணியில் இணைகிறது ஓவைசி கட்சி?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இணைய ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி முன்வந்துள்ளது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரணியில் நிற்க வேண்டும் என்பதற்காக கூட்டணி சேர தயார் என ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி எம்பி இம்தியாஸ் ஜலீல் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் தேதிகளை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் மாதம் முடிவடைதால் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றது இந்திய தேர்தல் ஆணையம்.

அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். ஆளும் பாஜக- ஏக்நாத் ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளன.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுகிறது என்கிறது எதிர்க்கட்சி கூட்டணி. மேலும் மராத்த ஜாதியினருக்கான இடஒதுக்கீடு விவகாரம் அம்மாநில சட்டசபை தேர்தலில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியுடன் கை கோர்க்க தயாராகிவிட்டது. இது தொடர்பாக மஜ்லிஸ் கட்சி எம்பி இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும். இதற்கான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளார். மகா விகாஸ் அகாடியில் மஜ்லிஸ் கட்சி இணைவதன் மூலம் முஸ்லிம் வாக்குகளை அதிகமாக பெற முடியும் என்பது அந்த கூட்டணியின் நம்பிக்கை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications