மகாராஷ்டிரா தேர்தல்: யார் கதையை யார் முடிப்பது? 75 தொகுதிகளில் பாஜக- காங்கிரஸ் நேரடி உக்கிர மோதல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் யுத்த களமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜகவும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் உள்ள காங்கிரஸும் 75 சட்டசபை தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. விதர்பா, மேற்கு மகாராஷ்டிரா, கொங்கண் பகுதிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதும் இந்த தொகுதிகள் மிக முக்கியமானவையாகவும் எதிர்பார்ப்புக்குரியவையாகவும் உள்ளன.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

maharashtra assembly election 2024

மகாராஷ்டிராவின் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை 75 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்திய நம்பிக்கையில் சட்டசபை தேர்தலிலும் சரித்திரம் படைப்போம் என்பது காங்கிரஸ் நம்பிக்கை

மேற்கு மகாராஷ்டிராவில் 32, வடக்கு மகாராஷ்டிராவில் 17, மராத்வாடாவில் 19, மும்பை, தானேவை உள்ளடக்கிய கொங்கன் பகுதியில் 33 வேட்பாளர்களை பாஜக களமிறக்கி இருக்கிறது. மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு எதிராக 47 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

2019-ம் ஆண்டு பாஜகவும் காங்கிரஸும் 66 தொகுதிகளில் நேரடியாக மோதின. பாஜக 50 இடங்களையும் காங்கிரஸ் 16 இடங்களையும் கைப்பற்றின. 2019-ல் விதர்பா பிராந்தியத்தில் பாஜக- காங்கிரஸ் இடையே 31 தொகுதிகளில் நேரடி போட்டி இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் வெறும் 8 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. விதர்பா பிராந்தியத்தின் தேர்தல் முடிவுகளே புதிய அரசை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வெடட்டிவார் இருவருமே விதர்பா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.

மும்பை பிராந்தியத்தில் 2019-ல் பாஜக- காங்கிரஸ் கட்சிகள் 12 தொகுதிகளில் மோதின. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில்தான் வெல்ல முடிந்தது. இந்த முறை உத்தவ் தாக்கரே சிவசேனாவின் வாக்குகள் கணிசமாக காங்கிரஸுக்கு கிடைக்கும் என்பதால் இந்த பிராந்திய முடிவுகளும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

வடக்கு மகாராஷ்டிராவில் பாஜக- காங்கிரஸ் கட்சிகள் 2019-ல் 6 இடங்களில் மோதின. காங்கிரஸ் கட்சியால் 2-ல்தான் வெல்ல முடிந்தது. மராத்வாடா பகுதியில் இரு கட்சிகளும் 10 தொகுதிகளில் நேருக்கு நேராக மோதியதில் காங்கிரஸுக்கு 3 இடங்களே கிடைத்தன. மேற்கு மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதியதில் காங்கிரஸுக்கு 2 இடங்களே கிடைத்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+