மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- தனித்துதான் போட்டி.. ராஜ்தாக்கரே திட்டவட்டம்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடம் பெறவில்லை; தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவை ஆதரித்து ராஜ்தாக்கரே பிரசாரம் செய்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு. நவம்பர் 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரம் செய்தவர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே. 2006-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கியவர் ராஜ்தாக்கரே. இந்துத்துவா மற்றும் மராத்திய தேசியவாதத்தை தீவிரமாக முன்வைப்பவர் ராஜ்தாக்கரே.
ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனித்துதான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் ராஜ்தாக்கரே. இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், சட்டசபை தேர்தலில் இதர கட்சிகளை விட அதிகமான இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பின்னர் அமையும் ஆட்சியில் நாங்களும் பங்கேற்போம். சுங்க கட்டணம் ரத்து என்பது எங்களது நீண்டகால கோரிக்கை. இதனை பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றி இருப்பது வரவேற்புக்குரியது என்றார்.
மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏக்நாத் ஷிண்டே முன்னிறுத்டப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் இருவரும் முதல்வர் வேட்பாளராக தாங்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரே தம்மை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் முதல்வர் வேட்பாளர் குறித்து மவுனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications