மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 194 இடங்களைக் கைப்பற்றும் என ஏபிபி டிவ் சேனல் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இறுதி கட்ட பிரசாரங்கள் உச்சகட்டமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏபிபி- சி வோட்டர் இணைந்து கருத்து கணிப்பை நடத்தின. இக்கருத்து கணிப்பு முடிவுகளின் விவரம்.

பாஜக-சிவசேனா கூட்டணி

பாஜக-சிவசேனா கூட்டணி

இம்மாநிலத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி 194 இடங்களில் வெற்றி பெறும் என்கிறது இக்கருத்து கணிப்பு. இரு கட்சிகளும் இணைந்து மீண்டும் இம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு முடிவு.

எதிர்க்கட்சிகளுக்கு 86

எதிர்க்கட்சிகளுக்கு 86

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 86 இடங்கள்தான் கிடைக்குமாம். அத்துடன் இதர கட்சிகளுக்கு 8 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஏபிபி கருத்து கணிப்பு.

வாக்குகள் சதவீதம்

வாக்குகள் சதவீதம்

பாஜக கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைக்குமாம். அதேநேரத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங். அணிக்கு 39% வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 14% வாக்குகளும் கிடைக்குமாம்.

2014-ல் எத்தனை இடங்கள்

2014-ல் எத்தனை இடங்கள்

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள், பாஜக தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும் சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+