மகாராஷ்டிரா: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை.. தொங்கு சட்டசபை? பாஜக ஆட்சி? எக்ஸிட் போல் சொல்வது என்ன?
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் 65.2% வாக்குகள் பதிவாகி இருந்தன. 1995-ம் ஆண்டு பின்னர் மகாராஷ்டிரா தேர்தலில் அதிகபட்சமான வாக்குப் பதிவு இது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பதிவான இந்த வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை (எக்ஸிட் போல் முடிவுகளை) வெளியிட்டிருந்தன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள்.

Lokshahi-Marathi Rudraவின் எக்ஸிட் போல் முடிவானது மகாராஷ்டிராவில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளோ பாஜக கூட்டணி ஆட்சியே மீண்டும் அமையும் என்கின்றன. Dainik Bhaskar, P-MARQ கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்கின்றன.
Lokshahi-Marathi Rudra எக்ஸிட் போல் முடிவு:
பாஜகவின் மகாயுதி கூட்டணி 128 முதல் 142 இடங்கள்
காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்கள்
இதர கட்சிகள் 18 முதல் 23 இடங்கள்
பாஜக கூட்டணி ஆட்சியே நீடிக்கும் என்கின்றன பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள்.
P-MARQ எக்ஸிட் போல் முடிவு
பாஜக கூட்டணி 137-157 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 126-146
இதர கட்சிகள் 02-08
People's Pulse எக்சிட் போல் முடிவு
பாஜக கூட்டணி 175-195 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 85-112 இடங்கள்
இதர கட்சிகள் 7-12 இடங்கள்
Matrize எக்ஸிட் போல் முடிவு:
பாஜக கூட்டணி 150-170 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 110-130 இடங்கள்
இதர கட்சிகள் 8-10 இடங்கள்
JVC எக்ஸிட் போல் முடிவு
பாஜக கூட்டணி 150-167 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 107-125 இடங்கள்
இதர கட்சிகள் 13-14 இடங்கள்
Chanakya எக்ஸிட் போல் முடிவு
பாஜக கூட்டணி 152-160 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 130-138 இடங்கள்
இதர கட்சிகள் 6-8 இடங்கள்
Poll Diary எக்ஸிட் போல் முடிவு
பாஜக கூட்டணி 122-186 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 69-121 இடங்கள்
இதர கட்சிகள் 10-27 இடங்கள்
Dainik Bhaskar மட்டும் காங்கிரஸ் கூட்டணியை கைப்பற்றும் என்கிறது. இதன் முடிவுகள்:
பாஜக கூட்டணி 125-140 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி 135-150
இதர கட்சிகள் 20-25
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதும் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி அபார வெற்றியைப் பெறும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் இந்த கூட்டணி வெறும் 161 இடங்களில்தான் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications