Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்துறை தரமுடியாது.. இந்த 3ல் ஒன்றை தேர்வு செய்யுங்க.. ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தரவிட்ட பாஜக!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்றுள்ளனர். உள்துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. அதோடு உள்துறைக்கு பதில் 3 முக்கிய துறைகளில் ஒன்றை தேர்வு செய்யும்படி கூறியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது.

maharashtra eknath shinde bjp

அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனி மெஜாரிட்டிக்கு 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது.

மறுபுறம் ‛மகா விகாஸ் அகாடி’ எனும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மகாராஷ்டிராவின் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியானது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி இருந்தது. ஆனால் 132 தொகுதிகளில் வென்றதன் அடிப்படையில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக செயல்பட்டு பதவியேற்றனர்.

இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இலாகா பங்கீடுவதில் உள்ள பிரச்சனைகள் தான் காரணம். அதன்படி துணை முதல்வர் பதவியை ஏற்க மறுத்து வந்த சிவசேனா தலைவர் ஷிண்டே, பிரதமர் மோடி உள்பட பாஜக மேலிட தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் தனக்கு உள்துறை இலாகா வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறார்.

ஒரு மாநிலத்தை பொறுத்தவரை சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை கட்டுக்குள் வைப்பதில் உள்துறை தான் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் தான் முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும் உள்துறையை வாங்குவதில் ஏக்நாத் ஷிண்டே உறுதியாக உள்ளார். ஆனால் பாஜகவே உள்துறையை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்க மறுத்து வருகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே உள்துறையை வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வருகிறார்.

மகாராஷ்டிராவில் வரும் 11-ந் தேதி அல்லது 12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறலாம் என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள். இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் தெளிவான முடிவுகள் வெளியாகும் என்றும் வரும் 11-ந் தேதி அல்லது12-ந் தேதி அமைச்சரவை விரிவாக்கம் இடம் பெறலாம் என்றும் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்துறைக்கு பதில் பிற 3 துறைகளில் ஒன்றை தேர்வு செய்யும்படி பாஜக ஆஃபர் வழங்கி உள்ளதாம். அதன்படி வருவாய், நகர மேம்பாடு, பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்யும்படி பாஜக ஏக்நாத் ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நிதி மற்றும் திட்டமிடல் இலாகா துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏக்நாத் ஷிண்டேவிடம் உள்துறைக்கு பதில் வருவாய், நகர மேம்பாடு, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய பாஜக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சரவை பொறுத்தவரை முதல்வரை சேர்த்து அதிகபட்சமாக 43 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். இந்த அமைச்சரவையில் பாஜகவுக்கு 18 முதல் 20 அமைச்சர்களும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 12 முதல் 14 அமைச்சர்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 முதல் 11 அமைச்சர்களும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பாஜக உள்துறையுடன் சேர்த்து மின்சாரம், நீர்வளத்துறை, பழங்குடியினர் நலத்துறை, வீட்டு வசதித்துறை, கிராம மேம்பாடு, ஓபிசி நலத்துறை, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து கொள்ள உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி உள்துறை கிடைக்காத நிலையில் பொதுப்பணித்துறை, வருவாய், நகர மேம்பாட்டு துறைகளை வைத்து கொள்ள முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது.

மறுபுறம் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நிதித்துறையுடன் கூட்டுறவு, விவசாயம், சுகாதாரம், உயர்கல்வித்துறை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை வழங்கும்படி கேட்டுள்ளது. ஆனால் இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

மகாராஷ்டிராவில் நேற்று 3 நாள் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. வரும் டிசம்பர் 16ம் தேதி குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 16ம் தேதிக்குள் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மகாராஷ்டிராவில் அமைச்சரவை தொடர்பான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+