ஆளுநர் எழுதிய கடிதம்.. மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்துக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை 22 முதல் 24 தேதி வரை அரசு எடுத்து தீர்மானங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து இருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராகவும், தலைமையின் உத்தரவை மீறி கூட்டத்தை புறக்கணித்த 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தடை
இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் அனுப்பி வைத்த தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, துணை சபாநாயகர், சட்டசபை செயலர் உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் அதுவரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

பணிக்கு திரும்பிய ஆளுநர்
இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து கடந்த 26 ஆம் தேதி குணமடைந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பினார். வந்தவுடனே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில டிஜிபி, மும்பை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதி இருக்கிறார்.

அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஜூலை 22 முதல் 24 தேதி வரை அரசு எடுத்து தீர்மானங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ளார். இதன் தொடர்சியாக அமைச்சரவைக் கூட்டத்துக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்து இருக்கிறார். பிற்பகல் 2:30 மணியளவில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சிவசேனா கட்சியை சேர்ந்த ஒரே ஒரு அமைச்சர் மட்டுமே தற்போது உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications