அஹமத் நகரின் பெயர் அகில்யா நகர் என மாற்றம்.. அமைச்சரவை ஒப்புதல்! திடீர் ‛சேஞ்ச்சுக்கு’ காரணம் இதுதான்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள இஸ்லாமிய பெயரில் உள்ள அஹமத்நகரின் பெயரை அகில்யா நகர் என மாற்றம் செய்வதற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் அதன் பின்னணி பற்றியும், அகில்யா என்பது யாருடைய பெயர் என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா-பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசனோவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று மகாராஷ்டிராவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மேலும் மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களை குறிக்கும் வகையில் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றம் செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள அஹமத்நகரின் பெயரை மாற்றம் செய்ய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அஹமத்நகரின் பெயரை அகில்யா நகர் என பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அகில்யா என்பது மாராத்தா ராணியை குறிக்கும். அதாவது 18 ம் நூற்றாண்டில் மராத்தா ராணியான அகில்யாபாய் ஹோல்கார் இருந்தார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் அஹமத்நகரின் பெயர் என்பது அகில்யா நகர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அகில்யா பாய் ஹோல்காரின் 298ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி இந்த பெயர் மாற்றத்துக்கான அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது.
இவர் 18 ம் நூற்றாண்டில் மால்வா மாகாணத்தில் ஏற்பட்ட பிரச்சனையின்போது தலைமை பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் சிறந்த கொள்கைகளை அவர் வகுத்து புகழ் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நிலைில் தான் அகில்யா பாய் ஹோல்கரை பெருமைப்படுத்தும் வகையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்களின் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்வது இது முதல் முறையல்ல இதற்கு முன்பு அவுரங்காபாத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி நகர் எனவும், ஒஸ்மானாபாத் என்பதை தாராஷிவ் எனவும் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications