ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக அரசியலுக்கு என்ன செய்திருக்கும்? உத்தவ் தாக்ரே சரமாரி கேள்வி
மும்பை: இந்துத்துவ கொள்கைகள் குறித்துப் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் வடக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரசாரத்திற்காக கோலாப்பூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஆளும் மகா விகாஸ் அகாடியின் கூட்டணி சார்பில் காங்கிரஸைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜாதவ் களமிறங்குகிறார். அவருக்கு ஆதரவாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே நேரடியாகப் பிரசாரம் செய்தார்.

உத்தவ் தாக்ரே
இந்தக் கூட்டத்தில் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசிய முதல்வர் உத்தவ் தாக்ரே, இந்துத்துவா கொள்கைகளுக்கான "காப்புரிமை" பாஜகவிடம் மட்டும் இல்லை என்று குறிப்பிட்டார். உத்தவ் தாக்ரே மேலும் பேசுகையில், "சிவசேனா எப்போதும் இந்துத்துவ கொள்கையில் உறுதியாக இருந்து வந்துள்ளது. பாரதிய ஜன் சங்கம் மற்றும் ஜனசங்கம் என வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு வெவ்வேறு சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்யும் பாஜகவைப் போல சிவசேனா இல்லை.

இந்துத்துவா கொள்கை
இந்துத்துவா கொள்கைகளுக்கான "காப்புரிமை" பாஜகவிடம் மட்டும் இல்லை. ராமர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், அரசியலில் என்ன பிரச்சினையை பாஜக முன்னிறுத்தி இருக்கும் என்பது எனக்கு இன்னும் கூட புரியவில்லை. பாஜகவால் எந்த பிரச்சினையையும் எழுப்பி, அதற்கான தீர்வை தர முடியாது. இதன் காரணமாகவே அவர்கள் மதம் மற்றும் வெறுப்பு பிரசாரத்தை எப்போதும் கையில் எடுக்கின்றனர். காவி மற்றும் இந்துத்துவா மூலம் டெல்லியைப் பிடிக்க முடியும் என்பதை அவர்களுக்கு (பாஜக) காட்டியவர் எனது தந்தை பால் தாக்கரே தான்.

மத்திய அரசு
இதே கோலாப்பூர் வடக்கு பகுதியில் 2019இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸின் வாக்குகள் அதிகரித்தன. இது தான் அப்போது நாங்கள் தோல்வி அடையக் காரணமாக இருந்தது. 2019-ல் பாஜகவின் வாக்குகள் எங்கே போனது? அப்போது நீங்கள் (பாஜக) காங்கிரஸுடன் மறைமுகக் கூட்டணி வைத்திருந்தீர்களா? பால் தாக்கரேயை மதிப்பதாக பாஜக கூறுவது உண்மை என்றால், நவி மும்பை அமைய இருக்கும் புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த அவரது பெயரை வைக்கும் திட்டத்தை பாஜக ஏன் எதிர்க்கிறது.

வாக்குறுதி
மகாராஷ்டிராவில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப் பெரிய பாவத்தை நாங்கள் செய்துள்ளதாக பாஜக கூறுகிறது. ஆனால் நீங்கள் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்தது புனிதமான செயலா? வந்தே மாதரம் அல்லது பாரத் மாதா கி ஜெய் என்று மெகபூபா என்றாவது சொன்னாரா? நான் கோவிலாகக் கருதும் பாலாசாகேப்பின் அறையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்த வாக்குறுதியை பாஜக ஏன் பின்பற்றவில்லை.

பாஜக கூட்டணி
பாஜக உடனான கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. அமித் ஷா எனக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பின்பற்றவில்லை. ஏன் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்றும் கூட பாஜக தெரிவிக்கவில்லை. மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்துகிறது. ஆனால், மாநில அரசு அதை, குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கூட இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை. இது அபத்தமானது,

எரிபொருள் விலை உயர்வு
பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதாக ஃபட்னாவிஸ் கூறுகிறார். அது உண்மை தான்.. ஆனால் அதை எப்படி பச்சையாகவா சாப்பிட முடியும். உணவைக் கொடுத்துவிட்டு எரிபொருள் விலையை உயர்த்தினால் எப்படி? அப்போது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? கொரோனா காலத்தில் வெளியே வந்து பிளேட்களை அடிப்பது போல் சிலிண்டரை அடிக்க வேண்டுமா?

முதுகில் குத்த மாட்டோம்
இது மாநில மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. நாங்கள் ஒருபோதும் யாரையும் முதுகில் குத்துவதில்லை. எதிர்த்தரப்பு எங்களை விடச் சிறப்பாகச் செயல்படும் ஒரே பகுதி பொய்களைக் கூறுவதில் மட்டுமே.. அதை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம். மராத்தி மக்களுக்கு அநீதி நடக்கும் போது பாஜக இது குறித்து எதையும் பேசுவதாக எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கடுமையாகத் தாக்கி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications