ஆஹா.. கொளுத்தி போட்ட பாஜக.. முதல்வர் பொறுப்பை "அவர்"கிட்ட குடுங்க.. விழிக்கும் மகாராஷ்டிரா

முதல்வர் பொறுப்பை ஷிண்டேவிடம் ஒப்படைக்க சொல்கிறது பாஜக

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பை ஷிண்டேவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளது.. இதன்காரணமாக கடந்த மாதம் 10-ம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு 12-ம் தேதி அவருக்கு முதுகுத்தண்டு ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது... தொடர்ந்து சிகிச்சையில் இருந்த உத்தவ் தாக்கரே 22 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்.

ஓய்வு

ஓய்வு

உத்தவ் தாக்கரே நலமாக இருப்பதாகவும், அவர் ஓய்வு எடுத்துக் கொண்டே வீட்டில் இருந்தபடி பணிகளை தொடரலாம் என்றும் டாக்டர்களும் அப்போது அறிவுறுத்தி இருந்தனர்.. அதேசமயம், உத்தவ் தாக்கரேவுக்கு இன்னும் சில வாரங்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை இருப்பதால் அதுவரை நேரடி பணிக்கு செல்ல முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தொடர்

கூட்டத்தொடர்

டாக்டர்கள் தாக்கரவை ரெஸ்ட் எடுக்க அறிவுறுத்தியதால், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை... இப்படிப்பட்ட சூழலில், ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு, குணமடைய நேரம் எடுத்து கொண்டால், மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பை சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே வழங்க வேண்டும் என்று மத்திய பாஜக அமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.. இதுதான் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

புதிதாக தொடங்கப்பட்ட ஜல்னா-புனே ரயில் சேவையில் நேற்றைய தினம், மத்திய ரயில்வே துறை அமைச்சரான ராவ்சாகேப் தன்வே பயணம் செய்தார்.. பிறகு அவுரங்காபாத் ஸ்டேஷனில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது, "ஆபரேஷனுக்கு பிறகு குணமடைய நேரம் ஆகும் என்பதால், மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பை சிவ சேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவிடம் உத்தவ் தாக்கரே வழங்க வேண்டும்... ஷிண்டே ஒரு திறமையான அமைச்சர்...

 உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

அதேசமயம், சிவசேனாவில் பிரச்சினையை உருவாக்க நான் எதுவும் முயற்சிக்கவில்லை... உத்தவ் தாக்கரே குணமடைய கால அவகாசம் தேவை என்றால், ஷிண்டேவிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்கிறேன்" என்றார். பாஜக மத்திய அமைச்சர் இப்படி பேசியது ஏன்? எதற்காக? என்பதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. பொதுவாக, மாற்று கட்சி தலைவர்களை சமயம் பார்த்து கொக்கி போட்டு இழுப்பது என்பது பாஜகவின் வியூகங்களில் ஒன்று..

புதுச்சேரி

புதுச்சேரி

இப்படித்தான் நம்ம புதுச்சேரியில் ரங்கசாமிக்கு உடம்பு சரியில்லாமல், சிகிச்சையில் இருந்தபோது, அம்மாநில அரசு திண்டாடிவிட்டது.. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்று கொள்ளக்கூடிய முடியாத சூழல் ஏற்பட்டபோது, பாஜக அங்கு நடத்திய அரசியலை நாடே பார்த்தது.. ஒருவேளை, மகாராஷ்டிராவிலும் அதே பாணியை கையில் எடுக்கிறதா? அல்லது உண்மையிலேயே முதல்வர் தாக்கரே மீது அக்கறையின் காரணமாக இவ்வாறு சொல்கிறதா என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+