சிவசேனாவுடன் இணைவதா? வேண்டாமா? என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்?
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று கடைசி கட்ட ஆலோசனை செய்ய உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்று கடைசி கட்ட ஆலோசனை செய்ய உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நிகழ்ந்து வந்த அரசியல் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.
பாஜக சிவசேனா இடையில் இன்னும் உடன்படிக்கை எட்டப்படவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சிவசேனாவுடன் சேராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

நிலை என்ன
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.

இன்று ஆலோசனை
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். டெல்லியில் இன்று நடக்கும் மீட்டிங் இறுதிக்கட்ட மீட்டிங்காக இருக்கும் என்கிறார்கள். இன்று நடக்கும் ஆலோசனையில் பெரும்பாலும் இறுதி முடிவு எடுக்கப்படும். மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

என்ன பெயர்
இந்த கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டால் பெரும்பாலும் அதற்கு மகா சிவா அகாடி என்று பெயர் வைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கேசி வேணுகோபால், சோனியா காந்தி, ஏ கே அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தலைவர்கள்
அதேபோல் சிவசேனா தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை கொடுக்கலாமா? அப்படி செய்தால் எம்எல்ஏக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று இன்று விவாதம் நடக்க உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications