மகாராஷ்டிரா.. என்சிபிக்கு துணை முதல்வர்.. காங்கிரசுக்கு சபாநாயகர்.. ஆலோசனையில் இறுதி முடிவு!
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 13 அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், 15 அமைச்சரவை இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் மொத்தம் 13 அமைச்சரவை பொறுப்புகள் அளிக்கப்பட உள்ளது. சிவசேனாவிற்கு 15 அமைச்சரவை இடங்கள் அளிக்கப்படுகிறது.
சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. மூன்று கட்சிகள் இணையும் மகா விகாஸ் ஆகாதி என்று புதிய கூட்டணிக்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட ஆலோசனையில் அமைச்சரவை ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டணியின் தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டார். இவர் நாளை மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

எத்தனை இடம்
இந்த நிலையில் இந்த கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சிவசேனா மொத்தமும் 15 அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள இருக்கிறது. இதில் 8 அமைச்சரவை பதவிகள் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

என்சிபி எத்தனை இடம்
இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சி மொத்தம் 15 அமைச்சரவை பதவிகளை பெற உள்ளது. அந்த கட்சிக்கு துணை முதல்வர் பதவி உறுதியாகி உள்ளது. இதில் சரத் பவாருக்கும் முக்கியமான அமைச்சரவை பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்னும் சில முக்கிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சி
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 13 அமைச்சரவை பதவி வழங்கப்பட உள்ளது. இதில் 9 பதவிகள் முக்கியமான அமைச்சரவை பதவிகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அங்கு அசோக் சவானுக்கு முக்கிய பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பாஜக எழுச்சி
ஆம் மகாராஷ்டிராவில் பாஜக எழுச்சிக்கு பின் அங்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அதிகாரத்தில் உட்காரவே முடியாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் தற்போது சிவசேனாவின் அரசியல் சாகசத்தால் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் தானாக அவர்களுக்கு அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது.

இல்லை
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்படஉள்ளது . சிவசேனா முதல்வர், தேசியவாத காங்கிரசின் துணை முதல்வர், காங்கிரசின் சபாநாயகர் என்று அதிகாரம் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications