மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா - தாராவியில் 30 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,666 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 232 பேர் கொரோனா தொற்று நோயால் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மேலும் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் 572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தாராவியில் அதிகரிப்பு

தாராவியில் அதிகரிப்பு

இதனிடையே மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தாராவியில் மட்டும் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்திருக்கிறது. தாராவியில் இதுவரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

டெல்லி நிலவரம்

டெல்லி நிலவரம்

டெல்லியில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2081. உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.

குஜராத்தில் 2000-த்தை நெருங்கியது

குஜராத்தில் 2000-த்தை நெருங்கியது

இதேபோல் குஜராத் மாநிலத்திலும் இன்று ஒரே நாளில் 201 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அகமதாபாத்தில் மட்டும் 153 பேருக்கு இன்று கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000-த்தை நெருங்கிவிட்டது. தெலுங்கானாவில் மேலும் 2 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 872 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மொத்தம் 23 பேர் தெலுங்கானாவில் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

உ.பி. 1,000த்தை தாண்டியது

உ.பி. 1,000த்தை தாண்டியது

உத்தரப்பிரதேசத்தில் 84 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1184 ஆக அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18. இதனிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லாக்டவுனால் ஹரித்துவாரில் நடைபெற உள்ள தந்தையின் இறுதி சடங்குகளில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+