அஜித் பவாருக்கு இது தெரியுமா தெரியாதா? 2 ஆண்டுக்கு முன்பே இதே விமானம்.. மும்பையில் நடந்த விபத்து
மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் பயணம் செய்த விமானம் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்துள்ளார். அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானத்தை இயக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான இதே மாடல் விமானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே விபத்தில் சிக்கிய சம்பவம் தெரியவந்துள்ளது.
அஜித் பவார் பயணித்த இந்த விமானம் கடந்த 2023 ஆம் ஆண்டே விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி VSR Ventures நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.

கனமழை, குறுகிய தொலைவு
ஆனால், அப்போது அங்கு பெய்த கனமழை மற்றும் குறுகிய தொலைவே கண்ணுக்கு புலப்பட்டது போன்ற காரணங்களால் விமான நிலையத்தில் சறுக்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு வந்த போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. விமானத்தில் ஆறு பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ரன்வே 27ல் தரையிறங்க விமானத்திற்கு அனுமதி கிடைத்ததும், விமானம் தரையிறங்கியது. அப்போது ஓடுதளத்தில் அப்ரோன் சி பகுதியை நோக்கி விமானம் சறுக்கி கொண்டே சென்றுள்ளது. 40 வினாடிகளுக்கு ஆட்டோ பைலட் கனெக்‌ஷனும் கட் ஆகியுள்ளது. காக்பிட்டில் ஸ்டிக் ஷேக்கர் மற்றும் ஸ்டால் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.
இரண்டாக பிளந்து தீ விபத்து
தொடர்ந்து, டாக்ஸிவேக்கள் சந்திக்கும் பகுதியில் அருகே விமானம் அவசரமாக தரையிறங்கிய நிலையில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பிரதான பகுதி அதாவது உடல் பகுதி என்று சொல்லகூடிய இடம்.. இரண்டு பகுதிகளாகப் பிளந்து தீ பிடித்துள்ளது. எனினும், விமானத்தில் இருந்த அனைவரும் காயங்களுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
இந்த விமானம் மணிக்கு 850 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடிய திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் திறன் உள்ளதால் இந்தியாவில் அரசியல்வாதிகள் பெரிதும் இதனை பயன்படுத்துகிறார்கள். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,700 கிலோ மீட்டர் வரை இந்த விமானம் செல்லும் இதில் 6-8 பேர் வரை பயணிக்கலாம்.
1998 களில் பயன்பாட்டுக்கு வந்தது
இந்த விமானத்தில் இரட்டை என்ஜின்கள் உள்ளன. பாம்பார்டியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த லியர்ஜெட் மாடல் விமானங்கள் 199 களில் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் ஆகின. 1998 ஆம் ஆண்டு இந்த விமானம் பயன்பட்டுக்கு வந்ததுள்ளது. சிறிய நகரங்களுக்கு செல்லவும் பிரசார பயணங்களுக்கும் செல்ல அரசியல் தலைவர்கள் இத்தகைய விமானங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications