"இனி மும்பை மண்ணில் கால் வைத்தால்.." அண்ணாமலைக்கு ஷாக் மிரட்டல்.. மராட்டிய அமைப்புகள் பகீர்
மும்பை: மும்பை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த அண்ணாமலை, மும்பை மகாராஷ்டிர நகரம் இல்லை.. அது சர்வதேச நகரம் எனப் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசி வருகிறார்கள். இது அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமான நகரம் இல்லை என்றும் அது சர்வதேச நகரம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலையின் இந்தக் கருத்துகளை இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், அண்ணாமலை மகாராஷ்டிராவையும் மராத்தியர்களையும் அவமானப்படுத்திவிட்டதாகச் சொல்லி அங்கு தாக்கரே சிவசேனா கடுமையாகச் சாடி வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி இது தொடர்பாகச் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறது.
மீண்டும் அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவர் மீது கருப்பு மை வீசப்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும், "பாஜகவின் அண்ணாமலை மீண்டும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால்.. மராத்தி ஏகிகரன் சமிதி அவர் முகத்தில் கருப்பு மை வீசும். மகாராஷ்டிராவுக்கு வந்து துரோகம் இழைக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவை இழிவுபடுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
மாறாது
அண்ணாமலையின் அடுத்த 700 தலைமுறைகள் வந்தாலும் கூட மும்பை மகாராஷ்டிர மாநிலமாகவே இருக்கும். இதுபோல ஏகப்பட்டப் பேர் வந்து போய் இருக்கிறார்கள். யாராலும் மும்பையைப் பறித்துவிட முடியாது. மகாராஷ்டிராவின் தியாகிகளையும் மராத்தி மக்களையும் அவமதித்ததற்கு, அண்ணாமலை உடனடியாக மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
மிரட்டல்
மேலும், தாக்கரே ஆதரவாளர்களும் எம்என்எஸ் தொண்டர்களும் கூட அண்ணாமலை கருத்துக்குக் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். சிலர் அண்ணாமலை மீண்டும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால்.. காலையே வெட்டிவிடுவோம் என்றும் கூட வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதேபோல ராஜ் தாக்கரேவும் கூட அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, "ஒரு ரஸ்மலாய் தமிழ்நாட்டில் இருந்து வந்தது வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார். மும்பைக்கும் உனக்கும் என்ன தொடர்பு? மராத்தியர்களுக்குத் தங்கள் சொந்த நகரில் வீடுகள் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், வெளியாட்கள் வந்து மும்பை குறித்துப் பேசுவதை ஏற்க முடியாது" என்று சாடினார்.
சஞ்சய் ராவத்
தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்தும் அண்ணாமலை பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சஞ்சய் ராவத், "மகாராஷ்டிராவில் இருந்து மும்பை பிரியாது என்று பட்னாவிஸ் கூறுகிறார். ஆனால், அவர்கள் பிரச்சாரத்திற்கு வந்த அண்ணாமலை மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமல்ல என்கிறார். யார் இந்த அண்ணாமலை? அவர் என்ன பாஜக தேசிய தலைவரா? 106 மராட்டியத் தியாகிகளையும் அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசியிருக்கிறார்.அவர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், அண்ணாமலையை லுங்கி அணிந்து வந்த நபர் என்று மோசமாகக் குறிப்பிட்ட சஞ்சய் ராவத், "எங்கிருந்தோ வந்து நமது கன்னத்தில் அறைகிறார்.. நமது தன்மானம் எங்கே போனது.. அண்ணாமலை மீது பட்னாவிஸ் அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. ஆனால், அவர் பின்னாலேயே மறைந்து கொண்டு இருக்கிறார்கள்" கடுமையாக சாடினார்.
-
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications