மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சிக்கே ஆபத்தாக மாறிய ஏக்நாத் ஷிண்டே.. சட்டசபை குழு தலைவர் பதவியிலிருந்து தூக்கிய சிவசேனா.. அதிரடி

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையின் கட்சி குழுத தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக சிவசேனா அறிவித்துள்ளது.

Recommended Video

    Maharashtra Political Crisis | Uddhav Thackeray Speech | Shivsena

    மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தற்போது சிவசேனாவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது.

     Maharashtra: Eknath Shinde removed as Shiv Sena legislative group leader

    சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு 13 எம்.எல்.ஏக்களும் ஆட்சிக்கு எதிராக்க போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் கலகக் குரல் எழுப்பிய அத்தனை எம்.எல்.ஏக்களும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளனர்.

    ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட்டோரை சமாதானப்படுத்தும் முயற்சிகளை சிவசேனா மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் சிவசேனாவின் சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவாளர்களும் சிவசேனாவில் இருந்து வெளியேறுவது அல்லது வெளியேற்றப்படுவது உறுதியாகி உள்ளத்உ.

    இதனிடையே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரேவின் சிந்தனைகளுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ய மாட்டேன். பால்தாக்கரே இந்துத்துவாவை எங்களுக்கு கற்பித்துவிட்டு சென்றுள்ளார். அதிகாரத்துக்காக பால்தாக்கரேவின் சிந்தனைகளுக்கு துரோகம் செய்யமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Eknath Shinde removed as Shiv Sena legislative group leader in Maharashtra assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X