தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி, சயோன் கோலிவாடா தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழர்கள் அதிகமுள்ள தாராவி மற்றும் சயோன் கோலிவாடா தொகுதிகள் பிரச்சார களத்திலேயே அதிக கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த இரண்டு தொகுதிகள் அடங்கிய மும்பை சிட்டியில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தாராவி மற்றும் சயோன் கோலிவாடா தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். சயோன் கோலிவாடா தொகுதியில் பாஜகவின் கேப்டன் தமிழ்செல்வன் கடந்த இரண்டு முறையாக அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் அவர் அங்கு தொடர்ந்து மூன்றாவது முறை போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கணேஷ் யாதவ் போட்டியிடுகிறார். தமிழ்செல்வனுக்கு வயது 64. கணேஷ் யாதவுக்கு வயது 33. தமிழ்செல்வன் 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். கணேஷ் எம்பிஏ பட்டதாரி. இளைஞர், படித்தவர் போன்றவை கணேஷ்க்கு சாதகமாக இருந்தாலும், தமிழ்செல்வனுக்கு அந்தத் தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது.
கடந்த 2019 சட்டசபை தேர்தலிலும் இந்த இருவருக்கிடையே தான் போட்டி நிலவியது. இந்த முறையும் இவர்கள் இரண்டு பேரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தாராவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கெய்க்வாட் ஜோதி ஏக்நாத், சிவசேனா சார்பில் ராஜேஷ் சிவதாஸ் கந்தாரே போட்டியிடுகின்றனர். கடந்த 2019 சட்டசபை தேர்தலில் சிவசேனா வேட்பாளர் ஆசிஷ் வசந்தை, காங்கிரஸ் வேட்பாளர் வர்ஷா கெய்க்வாட் வெற்றி பெற்றிருந்தார்.
தாராவி தனி தொகுதியாகும். தாராவி தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத செல்வாக்குடன் உள்ளது. ஏக்நாத் கெய்க்வாட் மூன்று முறையும், அவரின் மகள் வர்ஷா மூன்று முறையும் எம்எல்ஏவாக இருந்துள்ளனர். வர்ஷா எம்பி ஆகிவிட்டதால் இந்தமுறை அவரன் தங்கை ஜோதி போட்டியிடுகிறார்.
தாராவி ஆசியாவிலேயே குடிசைப் பகுதி திட்டம் அதிகமுள்ள தொகுதியாகும். இந்த தேர்தலில் தாராவி மறுசீரமைப்பு திட்டம் பேசு பொருளாகியுள்ளது. அதன் தாக்கம் தாராவி தொகுதியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாகவும் தாராவி உள்ளது.
தாராவி, சயோன் கோலிவாடா ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளும் மும்பை மாநகர் மாவட்டத்தில் வருகின்றன. மதியம் 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 58 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பை மாநகர் மாவட்டத்தில் 40 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளன.
மும்பை சிட்டியில் உள்ள அனைத்து தொகுதிகளில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. மதியத்துக்கு பிறகு தான் மக்கள் வாக்களிக்க தொடங்கியுள்ளனர். தாராவி தொகுதியில் சிவசேனா தேர்தல் நடத்தை விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபடுவதாக ஜோதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இன்று ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனுடன் ஒப்பிடும்போது மகாராஷ்டிரா மாநிலம் முழுவதுமே வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ளது. மகாராஷ்டிரா மக்கள் விரைந்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications