மகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சருமான அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. இங்கு கொரோனாவால் மொத்தம் 50,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,635.
மகாராஷ்டிராவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திரா ஆவாத் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது ஜிதேந்திரா நலமடைந்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான அசோக் சவாணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மும்பையில் இருந்து சொந்த தொகுதியான மராத்வாடாவுக்கு அசோக் சவாண் அடிக்கடி பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதனால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அசோக் சவாண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications