Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது உத்தவ் தாக்ரே அரசு.. 169 வாக்குகள் கிடைத்தன

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.

இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். இன்று உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இன்று மதியம் 2 மணிக்கு சட்டசபை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.

அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்துவார். பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கோலம்ப்கருக்கு பதிலாக இவர் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Nov 30, 2019, 3:16 pm IST

மகாராஷ்டிரா

சத்ரபதி சிவாஜியின் மகன்கள் நாங்கள்- உத்தவ் தாக்ரே
Nov 30, 2019, 3:16 pm IST

மகாராஷ்டிரா

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற உத்தவ் தாக்ரே சட்டசபையில் முதல் உரை
Nov 30, 2019, 3:15 pm IST

மகாராஷ்டிரா

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு
Nov 30, 2019, 3:01 pm IST

மகாராஷ்டிரா

பிற கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் நடுநிலை வகித்தனர்
Nov 30, 2019, 3:01 pm IST

மகாராஷ்டிரா

பாஜக வெளிநடப்பு செய்ததால் உத்தவ் தாக்ரே அரசுக்கு எதிராக ஒரு வாக்கும் பதிவாகவில்லை
Nov 30, 2019, 2:55 pm IST

மகாராஷ்டிரா

169 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு
Nov 30, 2019, 2:55 pm IST

மகாராஷ்டிரா

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது உத்தவ் தாக்ரே அரசு
Nov 30, 2019, 2:53 pm IST

மகாராஷ்டிரா

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கோஷம்
Nov 30, 2019, 2:53 pm IST

மகாராஷ்டிரா

வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏக்கள் மீண்டும் சட்டசபை வருகை
Nov 30, 2019, 2:38 pm IST

மகாராஷ்டிரா சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து தேவேந்திர பட்னாவிஸ் உட்பட அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு
Nov 30, 2019, 2:36 pm IST

மகாராஷ்டிரா

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியது
Nov 30, 2019, 2:36 pm IST

ஆதரவு, எதிர்ப்பு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக எண்ணப்படுவார்கள்
Nov 30, 2019, 2:31 pm IST

மகாராஷ்டிரா

சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேசி வருகிறார். முதல்முறையாக அவர் சட்டசபையில் பேசி வருகிறார்
Nov 30, 2019, 2:30 pm IST

மகாராஷ்டிரா

சபாநாயகரை தேர்வு செய்யாமல், முதல்முறையாக மகாராஷ்டிராவில் தற்காலிக சபாநாயகரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது -பட்னாவிஸ்
Nov 30, 2019, 2:30 pm IST

மகாராஷ்டிரா

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நேற்று இரவோடு இரவாகத்தான் எங்களுக்கு தெரிவித்தனர்-பட்னாவிஸ்
Nov 30, 2019, 2:30 pm IST

மகாராஷ்டிரா

அரசியலமைப்பு சட்டம் குறித்து பேச கூட எனக்கு அனுமதி இல்லை என்றால், நான் ஏன் அவையில் இருக்க வேண்டும் -பட்னாவிஸ்
Nov 30, 2019, 2:18 pm IST

மகாராஷ்டிரா

கவர்னர் அனுமதியுடன் அனைத்தும் விதிப்படிதான் நடக்கிறது- தற்காலிக சபாநாயகர் எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் பதிலடி
Nov 30, 2019, 2:17 pm IST

மகாராஷ்டிரா

வந்தே மாதரம் இசைக்காமல் சட்டசபை கூடியது விதிமுறைகளை மீறிய செயல்- பட்னாவிஸ் அதிருப்தி
Nov 30, 2019, 2:17 pm IST

மகாராஷ்டிரா

சட்டசபை விதிகளின்படி கூட்டப்படவில்லை என்று பாஜகவினர் கடும் அமளி
Nov 30, 2019, 2:14 pm IST

மகாராஷ்டிரா

சட்டசபையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசி வருகிறார். இந்த சட்டசபை விதிகளின் படி கூடவில்லை. அவைக்கு முன் தேசிய கீதம் கூட பாடப்படவில்லை . இது விதிக்கு முரணானது -பட்னாவிஸ்
Nov 30, 2019, 2:11 pm IST

மகாராஷ்டிரா

சட்டசபையில் வாக்குசீட்டு அடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்
Nov 30, 2019, 1:51 pm IST

சத்திரபதி சிவாஜி சிலைக்கு முதல்வர் உத்தவ் மரியாதை ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் உத்தவ் மரியாதை
Nov 30, 2019, 1:50 pm IST

காங்கிரஸ் சார்பாக இவர் சபாநாயகர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார்
Nov 30, 2019, 1:50 pm IST

காங்கிரஸ் கட்சி நானா பட்டோல் சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளார்
Nov 30, 2019, 1:50 pm IST

நாளை மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்
Nov 30, 2019, 1:49 pm IST

மகாராஷ்டிராவில் நாளையும் சட்டசபை நடக்கும்
Nov 30, 2019, 1:49 pm IST

சட்டசபைக்கு சிவசேனா கூட்டணி எம்எல்ஏக்கள் வர தொடங்கி உள்ளனர்
Nov 30, 2019, 1:49 pm IST

பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வெளியேற வாய்ப்புள்ளது
Nov 30, 2019, 1:49 pm IST

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் விப் நோட்டீஸ்
Nov 30, 2019, 1:49 pm IST

சட்டசபைக்கு தவறாமல் வர வேண்டுமென்று எம்எல்ஏக்களுக்கு விப் நோட்டீஸ்
READ MORE

Maharashtra Floor test LIVE UPDATES: CM Uddhav to prove his majority
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+