Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அடிமடியில்” அடி.. மகா. காங்கிரஸின் அடையாளம்! அலேக்காக மாஜி முதல்வர் அசோக் சவானை தட்டிதூக்கிய பாஜக

Subscribe to Oneindia Tamil

மும்பை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் நேற்று பாஜகவில் இணைந்து இருக்கும் நிலையில் இதனால் பாஜகவுக்கு என்ன லாபம்? காங்கிரஸுக்கு என்ன இழப்பு? என்பது குறித்து பார்ப்போம்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருக்கிறார். மகராஷ்டிராவில் அசோக் சவானின் அரசியல் எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையிலேயே அவர் பாஜகவில் இணைந்து உள்ளார். ஒரே மேடையில் இருவரும் பூங்கொத்துடன் இப்படி ஒற்றுமையாக நிற்பார்கள் என்பதை மகாராஷ்டிர மக்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

Maharashtra Former CM and Congress leader Ashok Chavan jumped to BJP

அந்த அளவுக்கு அம்மாநில அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த அசோக் சவானும், தேவேந்திர பட்னவிஸும் தற்போது ஓரணியில் இணைந்து உள்ளனர். கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "காங்கிரஸ் கட்சிக்கு நான் நேர்மையாக இருந்தேன். ஆனால், இன்று மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி மாநிலங்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, எங்கள் பகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கும் கட்சியாக பாஜகவே உள்ளது. நான் பல ஆண்டுகளாக பயணித்த கட்சிக்கு எதிராகவோ அதில் இருப்பவர்கள் பற்றி தவறாகவோ பேச விரும்பவில்லை." என்றார்.

மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பற்றி சவான் பேசியதுதான் சுவாரஸ்யம். "பட்னவிஸ் எப்போதும் எனது பகுதிக்கும் எனது தொகுதிக்கும் உதவிகரமாக இருந்து உள்ளார். அரசியல் எதிரிகளை மட்டுமே குறிவைத்து தாக்குவது மட்டுமே அரசியல் கிடையாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஏராளமான ஜாம்பவான்களை கொண்ட அரசியல் பாரம்பரியம் உடைய மாநிலம் மகாராஷ்டிரா. அவர்கள் நம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.

பாஜகவில் இணைய சொல்லி யாரும் என்னை அழைக்கவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. கடைசி நிமிடம் வரை நான் முன்பு அங்கம் வகித்த கட்சியினருடன்தான் இருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி உட்பட பல்வேறு காரணங்களுக்காக நான் பாஜகவில் இணைந்து உள்ளேன். ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. சட்டம் அதன் கடமையை செய்யும். அது ஒரு அரசியல் விபத்து. அதற்காக நான் நிறைய சந்தித்துவிட்டேன்." என்றார்.

தேவேந்திர பட்னவிஸோ, அசோக் சவானை அரசியல் ஜாம்பவான் என புகழ்ந்து உள்ளார். "மக்களவை மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டசபை இரண்டிலும் பணியாற்றிய, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகவும், துறை அமைச்சராகவும் இருந்த அரசியல் ஜாம்பவானை நான் பாஜகவுக்கு வரவேற்கிறேன். இவரை பாஜகவின் அடிப்படை உறுப்பினராக ஏற்க வேண்டும் என நான் மாநிலத் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார். இன்று பாஜக உறுப்பினர் படிவத்துக்கு ரூ.500 செலுத்தி அக்கட்சியில் இணைந்த அசோக் சவான் அம்மாநிலத்தில் அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்.

யார் இந்த அசோக் சவான்?: அவரது தந்தை எஸ்பி சவான் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர். 65 வயதான அசோக் சவான், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸின் முகமாக அறியப்பட்டவர். 2009 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்ற அவர், 2010 ஆம் ஆண்டு ஆதர்ஷ் குடியிருப்பு சங்க ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு பதவியில் இருந்து விலகினார். மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர், மாநில காங்கிரஸ் தலைவர், மக்களவை உறுப்பினர், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உள்துறை என பல்வேறு துறைகளில் துணை அமைச்சராக இருந்தவர்.

போக்குவரத்து, துறைமுகம், கலாச்சாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். மகாராஷ்டிராவில் அரசியல் பாரம்பரியமும் நீண்ட நெடிய அரசியல் அனுபவமும் மக்கள் செல்வாக்கும் கொண்ட இவர் பாஜகவுக்கு சென்று இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. இவர் மற்றும் இவரது தந்தை மீதுள்ள அபிமானத்தால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்கள் இனி பாஜகவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்பதால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு இவரது வருகை பெரும் பயனுள்ளதாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+