பிறப்புறுப்பில் கத்திக்குத்து.. இளம்பெண் வீட்டில் இருந்து அலறியபடி ஓடிய காதலன்.. நடுங்கவைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலனிடம் வாக்குவாதம் செய்து அவரது பிறப்புறுப்பில் இளம்பெண் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதல்.. இளமை பருவத்தில் பெரும்பாலானவர்கள் அனுபவித்த அற்புதமான உணர்வு. இவள்/இவன் தான் என் வருங்காலம் என்று பார்த்த நொடியில் மனதில் ‛பட்டாம்பூச்சி' பறக்க பேச பேச பிடித்துபோய் இதயங்கள் இடம்மாறி அன்பை பொழிவது தான் காதல்.

maharashtra crime

இந்த காதல் பலரை திருமணத்தில் சேர்க்கலாம். சிலருக்கு திருமணத்துக்கு முன்பு ‛பிரேக்அப்' ஆகலாம். இந்த ‛பிரேக்அப்'புக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் சிலரின் காதலுக்கு தங்களின் காதலன் அல்லது காதலியே எதிரியாக அமையலாம். அதாவது ஒருவர் உருகி உருகி காதலிக்க மற்றொருவர் ஏமாற்றி காதலில் இருந்து விடுபட நினைக்கலாம்.

இப்படியான சந்தர்ப்பங்களில் சிலர் காதலன், காதலியை மறந்து புதிய வாழ்க்கையை தேர்வு செய்யலாம். ஆனால் சிலரோ ஏமாற்றம் தாங்காமல் தற்கொலை செய்வது அல்லது காதலன்/காதலியை பழிவாங்கும் செயலில் ஈடுபடுகின்றனர். அப்படியான ஒரு பழிவாங்கல் சம்பவம் தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டி பகுதியில் உள்ள பத்மநகரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவருக்கும், 31 வயது நிரம்பிய வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளியே சுற்றி வந்துள்ளனர். இதற்கிடையே தான் வாலிபரிடம் அந்த இளம்பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

ஆனால் வாலிபர் ஏதாவது ஒரு காரணம் கூறி திருமணம் குறித்த பேச்சை தட்டிக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி பத்மநகரில் உள்ள வீட்டில் காதலியை , காதலன் சந்தித்தார். அப்போதும் திருமணம் குறித்த பேச்சை அந்த இளம்பெண் எடுத்துள்ளார். அதற்கு காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற இளம்பெண் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து வந்து வாலிபரின் பிறப்புறுப்பில் குத்தியுள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் துடித்துப்போன வாலிபர் வீட்டில் இருந்து வெளியே ஓடி சென்று அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார். மேலும் சம்பவம் குறித்து வாலிபர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 118 (1)வது (ஆயுதத்தை வைத்து தாக்குதல்) பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+