Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட் தரும் மகாராஷ்டிர அரசியல்? ஷிண்டே எடுக்கும் மேஜர் முடிவு.. ஆஹா இதை யாருமே எதிர்பார்க்கல

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கும் நிலையில், இன்னுமே யார் முதல்வர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இதற்கிடையே அம்மாநில காபந்து முதல்வர் ஷிண்டே மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்கவுள்ளதாக சிவசேனா கட்சியினர் கூறுகிறார்கள். இதனால் அங்கு சஸ்பென்ஸ் தொடர்கிறது.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னுமே அங்கு ஆட்சியை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. அம்மாநில காபந்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

maharashtra eknath shinde

இதனால் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்குத் திரும்பிவிட்டார். அங்கு மூன்று முதல் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

மகாராஷ்டிர அரசு: மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், பாஜகவில் இருந்தே ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகத் தான் செயல்படுத்திய திட்டங்களால் தான் பாஜக கூட்டணியால் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் இதனால் தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்குக் குழப்பம் ஏற்பட்டது. அதேநேரம் சில நாட்களில் ஏக்நாத் ஷிண்டே தனக்கு முதல்வர் பதவியில் விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டார்., பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைமையும் என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார். பாஜக சார்பில் இன்னும் யாரையும் முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் தற்போது துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் முதல்வராக்கப்படுவார் எனத் தெரிகிறது.

தொடரும் குழப்பம்: ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் குழப்பம் தொடர்கிறது. இந்தச் சூழலில் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாயுதி அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறியிருக்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார்.

மேஜர் முடிவு: ஏக்நாத் ஷிண்டே இந்த விவகாரத்தில் மிக முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக சிவசேனாவின் சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்தார். மேலும், அமைச்சரவை இடங்கள் குறித்து குழப்பம் நீடிக்கும் நிலையில், அவை அனைத்தும் திங்கள்கிழமை மாலைக்குள் தெளிவாகிவிடும் என்றும் ஷிர்சாத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "யோசிக்க தனக்குக் கூடுதல் நேரம் தேவை என்று சொல்லியே ஷிண்டே சொந்த ஊர் சென்றார். அவர் ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ளார். அது அரசியல் முடிவாக இருக்கலாம். திங்கள்கிழமை மாலைக்குள் எல்லாம் தெளிவாகிவிடும்" என்றார்.

அஜித் பவார்: மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் பாஜகவில் இருந்தே இருப்பார் என்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்குத் துணை முதல்வர் பதவி தரப்படும் என்று என்சிபி தலைவர் அஜித் பவார் நேற்று கூறியிருந்தார். ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுத் தர ஒப்புக் கொண்டாலும் என்சிபி கட்சியைக் காட்டிலும் அமைச்சரவையில் தங்களுக்கு அதிக இடம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாகவே கூட்டணியில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 234 இடங்களில் வென்றது. பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 57 இடங்களில் வென்ற நிலையில், அஜித் பவாரின் என்சிபி கட்சி 21 இடங்களில் வென்றது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+