450 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கல சிலை... மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு
மும்பை: மஹாராஷ்டிராவில் 450 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு பிரமாண்ட வெண்கல சிலை நிறுவ அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மும்பை தாதர் பகுதியில் உள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
சிலை நிறுவுவதற்காக முதலில் ரூ.763 கோடி ரூபாய் மதிப்பீடு செய்த மஹாராஷ்டிரா அரசு இப்போது அந்த தொகையை ரூ.1,069 கோடியாக உயர்த்தியுள்ளது.

மராட்டிய அரசு
மஹாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அம்பேத்கருக்கு பிரமாண்ட சிலையை நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்து மில்ஸ்
மும்பை தாதர் பகுதியில் அமைந்துள்ள இந்து மில்ஸில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சிலை நிறுவிய பின்னர் பூங்கா அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டார்.

மோடி அறிவிப்பு
மஹாராஷ்டிராவில் அம்பேத்கருக்கு பிரமாண்ட முறையில் சிலை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக சிலை நிறுவுவதற்கான பணிகள் எதுவும் தொடங்காத நிலையில், இப்போது அந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

கூட்டணி ஆட்சி
அம்பேத்கருக்கு சிலை நிறுவும் விவகாரத்தில் மோடியின் அறிவிப்பை கூட பட்னாவிஸ் அரசு நிறைவேற்றத்தவறி விட்டதாகவும், ஆனால் மோடியின் அறிவிப்பை தாங்கள் செயல்படுத்துவதாகவும் பெருமிதம் தெரிவிக்கின்றனர் சிவசேனா கட்சியினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications