மகாராஷ்டிராவில் அடுத்து என்ன நடக்கும்? சோனியாவை சந்தித்து சரத் பவார் தீவிர ஆலோசனை
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி இருவரும் இன்று ஆலோசனை செய்ய உள்ளனர்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி இருவரும் இன்று ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிரா அரசியலில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு தேர்தலில் நின்ற முக்கிய 4 கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.
ஆட்சியை அமைப்பதற்கு உருவான வாய்ப்பை அங்கு பாஜக நழுவவிட்டது. ஆட்சி அமைக்க விருப்பமில்லை , எங்களுக்கு சிவசேனா ஆதரவு இல்லை என்று பாஜக இரண்டு முறை அறிவித்துவிட்டது.

என்ன ஆட்சி
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில ஆளுநர் கொண்டு வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று கூறி ஆளுநர் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்தார்.

மீண்டும் வாய்ப்பு
இந்த நிலையில்தான் அங்கு தற்போது சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது.

விரைவில் ஆட்சி
செவ்வாய் கிழமைக்குள் அங்கு ஆட்சி அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி இருவரும் இன்று டெல்லியில் சோனியா இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

டெல்லி ஆலோசனை
சிவசேனா உடன் இணைவது சரியாக இருக்குமா என்று ஆலோசித்து வருகிறார்கள். இன்று ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும். கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications