மகாராஷ்டிராவிலும் காங்கிரஸை கதறவிடும் கூட்டணி கட்சிகள்!உத்தவ் தாக்கரே, சரத்பவார் கட்சிகள் பிடிவாதம்!
மும்பை: மகாராஷ்டிராவில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகியவை இடையேயான தொகுதிப் பங்கீடு இடியாப்ப சிக்கலாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டது. "இந்தியா" கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, டெல்லி- பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் ஒதுக்கும் இடங்களைத்தான் காங்கிரஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன. ஆனால் இந்த கட்சிகள் ஒதுக்கும் சொற்ப இடங்களைப் பெற காங்கிரஸ் விரும்பவும் இல்லை. இதனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலமும் இணைந்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளிடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிவசேனாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஜீரோ தொகுதியில் இருந்துதான் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என மிரட்டி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் உத்தவ் தாக்கரே சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 முதல் 11 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. எஞ்சிய இடங்களைத்தான் காங்கிரஸ் ஒதுக்கலாம் என்கின்றன என்சிபியும் சிவசேனாவும்.
ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடமோ, சிவசேனா 18, என்சிபி 6, காங்கிரஸ் 22 என்கிற பார்முலாவை முன்வைக்கிறது. இதனால் மகாராஷ்டிரா "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தி வெடித்துள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் "இந்தியா" கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் தாவிவிட்டதால் சிவசேனாவுக்கு தொகுதிகளைக் குறைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா 18 தொகுதிகளில் வென்றது. அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது சிவசேனா. 19 இடங்களில் போட்டியிட்ட என்சிபி 4 இடங்களில் வென்றது. சரத்பவாரின் என்சிபி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில்தான் வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications