"அடுத்த சீன் என்ன தெரியுமா".. The Conjuring படத்தை ஸ்பாய்லர் செய்தவரால் மோதல்.. கலவரமான மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டரில் தன் மனைவியிடம் படத்தின் காட்சிகள் குறித்து சத்தமாக சொல்லி ஸ்பாய்லர் செய்தது தொடர்பாக மோதலால் தியேட்டரே கலவரமாகியுள்ளது. மனைவியுடன் 'The Conjuring Last Rites படத்திற்கு சென்ற ஐடி ஊழியர், பின் இருக்கையில் ஸ்பாய்லராக சத்தம் போட்டிருந்தவருடன் மோதலில் ஈடுபட்டார். இதில் ஐடி ஊழியருக்கு கை உடைந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது. நண்பர்கள், குடும்பத்தினருடன் தியேட்டர் சென்று படம் பார்த்து ரசிப்பது மக்களின் முக்கிய பொழுதுபோக்காகும். அதுவும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர் மூலம் உருவான படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி விரும்பி செல்லும் படங்களை மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள். சமூகவலைதளம் தாக்கத்தால், இப்போது ஒரு படம் வெளியான முதல் காட்சியிலேயே அதன் ரிவ்யூ, படம் குறித்த முக்கிய தகவல்கள் ஸ்பாய்லர்களாக வெளியாகி விடுகின்றன.

சத்தம் போட்டு ஸ்பாய்லர்
மறுபக்கம் தியேட்டரிலும் அவ்வபோது தொந்தரவு ஏற்படும். 'The Conjuring Last Rites' ஹாலிவுட் படம் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. த்ரில்லர், ஹாரர் படமான இதற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. ரசிகர்கள் தங்கள் குடும்பம், நண்பர்களுடன் ஆர்வமாக படம் பார்த்து வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம், சின்சாவத் பகுதி, எல்ப்ரோ மாலில் உள்ள தியேட்டரில் 'The Conjuring Last Rites' திரையிடப்பட்டுள்ளது. அங்கு அபிஷேக் தேஷ்பாண்டே என்கிற ஐடி ஊழியர் (வயது 29) தன் மனைவியுடன் நேற்று மாலை படத்திற்கு சென்றுள்ளார்.
த்ரில்லர் படத்தை தியேட்டரில் ஆர்வத்துடன் பார்க்க காத்திருந்தார். அவர் ஒரு அனுபவத்தை நினைக்க, அங்கு அவருக்கு வேறு அனுபவம் தான் கிடைத்தது. இந்த தம்பதிக்கு பின் இருக்கையில் ஆக்விப் ஜாவித், நிசார் பட்டேல் தம்பதி அமர்ந்துள்ளனர். நிசாரும் தன் மனைவியை மிகவும் ஆர்வத்துடன் படத்திற்கு அழைத்து சென்றுள்ளார். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அபிஷேக் கடுப்பாகியுள்ளார். நிசார் தன் மனைவியிடம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், அடுத்து என்ன நடைபெறும் என்று சத்தமாக கூறியுள்ளார். இது ஸ்பாய்லராக இருந்ததால் படத்தை என்ஜாய் செய்ய முடியாமல் அபிஷேக் கடுப்பாகியுள்ளார்.
சண்டை
ஒருகட்டத்தில் அவர் அமைதியாக இருக்குமாறு பின் இருக்கையில் இருந்த தம்பதியிடம் எச்சரிக்கவும் செய்திருக்கிறார். பட்டேல் கேட்காமல் மீண்டும் மீண்டும் ஸ்பாய்லர் செய்து கொண்டிருந்ததால் அது கடைசியில் கைகலப்பாக மாறியது. கடுமையான வாக்குவாதம் முற்றி, இருவரும் தியேட்டரில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் தியேட்டரில் கடுமையான பதற்றம் தொற்றியுள்ளது.
கணவருடன் இணைந்து பட்டேலின் மனைவியும் தேஷ்பாண்டேவை தாக்கியுள்ளார். இதில் அபிஷேக் தேஷ்பாண்டே கீழே விழுந்து அவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேஷ்பாண்டே சின்சாவத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் பட்டேல் மற்றும் அவரின் மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் மோதலில் ஈடுபட்ட காரணத்தால் தேஷ்பாண்டே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications