மகாராஷ்டிராவில் 2-வது லாக்டவுன் அமல்? அதிகாரிகள் தயாராக இருக்க முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 2-வது லாக்டவுன் நடைமுறைப்படுத்த உள்ளது. அதனால் லாக்டவுனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு உள்ளது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போதைய நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,73,461; கொரோனாவால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் எண்ணிக்கை 54,073. இதனால் மகாராஷ்டிராவில் படிப்படியாக லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ளது.
இன்று மாநில அதிகாரிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது 2-வது லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், மருந்துகள், அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்டவற்றை எப்படி கையாள்வது என்பது தொடர்பாக தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 2-வது லாக்டவுனை அமுல்படுத்தும் போது எந்த குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அடுத்த ஓரிருநாட்களில் 2-வது லாக்டவுன் தொடர்பான அறிவிப்பை முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிடக் கூடும் என தெரிகிறது.
-
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications