மும்பை மாநகராட்சியை வெல்லப்போவது யார்? மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு!
மும்பை: மஹாராஷ்டிராவில், மும்பை, புனே உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. ஆசியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பையை கைப்பற்றுவதில் அரசியல் கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த டிசம்பரில், 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி, ஆளும் மஹாயுதி கூட்டணி வென்றது.

இந்நிலையில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், 20 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்த உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கூட்டணி வைத்துள்ளனர். துணை முதல்வர் அஜித் பவார், சில இடங்களில் சரத் பவாருட்ன் கை கோர்த்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் 29 மாநகராட்சிகளில் உள்ள 2.869 இடங்களுக்கு நடக்கிறது. இதற்கு 15 ஆயிரத்து 931 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 15,931 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன. மொத்தமாக 3.48 கோடி வாக்காளர்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியை கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. மும்பையில் மட்டும் 1,700 வேட்பாளர்கள் களத்தில் உள்ளன.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications