Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேகத்தடையில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்.. இறந்த‌ முதியவர் உயிர்பெற்ற அதிசயம்.. மெடிக்கல் மிராக்கிள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்ட 65 வயது முதியவரை, ஆம்புலன்சில் உறவினர்கள் கொண்டு வந்தபோது, வேகத்தடையில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியதில் அவர் மீண்டும் உயிர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த அதியச சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

உயிரிழந்ததாக கருதி இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யும் போது திடீரென சிலர் எழுந்து உறவினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிகழ்வுகள் சில சமயங்களில் நடைபெறுகின்றன. அதேநேரத்தில் ரமணா படத்தில் வருவதை போல உயிரிழந்தவரை, உயிருடன் இருக்கிறார் எனக்கூறி சில மருத்துவனை சிகிச்சை அளித்ததாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

maharashtra ambulance weird

ஆனால் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவர், ஆம்புலன்சில் வீட்டுக்கு கொண்டுசென்றபோது, வேகத்தடையில் ஏறி இறங்கிய போது அந்த முதியவர் மீண்டும் உயிருடன் வந்த அதிசய சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் கசாபா-பவாடா கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (வயது65). இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மனைவி மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாண்டுரங்க் உல்பேவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதைக்கேட்டு அவரது மனைவி, உறவினர்கள் சோகம் அடைந்தனர். கண்ணீருடன் பாண்டுரங்க் உடலை ஆம்புலன்ஸ் ஏற்றிய வீட்டுக்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்ய கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் பாண்டுரங்க் உடலுடன் காற்றை கிழித்தபடி விரைந்து சென்றது. அப்போது ஒரு வேகத்தடையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாக ஏற்றி இறக்கினார். இதில் பாண்டுரங்க் கை கால்களில் லேசான அசைவு தெரிந்தது.

உடனடியாக இதைக் கவனித்த குடும்பத்தினர் ஆம்புலன்சை நிறுத்த கூறினர். உடனடியாக வண்டியை யூ டேர்ன் எடுத்து அதே மருத்துவமனைக்கு பாண்டுரங்கை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் பாண்டுரங்க் உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள் ஐசியூவில் அட்மிட் செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் உடல் நலம் தேறிய பாண்டுரங்க் தற்போது 15 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், மீண்டும் நலமாக வீடு திரும்பியிருப்பதால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம கண்டத்தில் இருந்து தப்பிய பாண்டுரங் இது தொடர்பாக நெழ்ச்சியுடன் கூறியதாவது:- நான் காலையில் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு வந்ததும் டீ குடித்து கொண்டு இருந்தேன். அப்போது திடீரென எனக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. வாந்தியும் வந்தது. அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது யார் எனக் கூட தெரியாது" என்றார்.

உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டதாக அறிவித்தது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் ஆரோக்கியமாக நடமாடுவதை பார்த்த அப்பகுதி மக்கள், பாண்டுரங்கிற்கு ஆயுசு கெட்டிதான்" என பேசிக்கொண்டனர். வேகத்தடையில் ஏறி இறங்கியதால் உயிரிழந்தவர் மீண்டும் உயிர் பெற்றதாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல வேகமாக பரவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+