Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தி நாக்கு அறுத்தால் ரூ. 11 லட்சம்.. ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. மீது பாய்ந்தது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இடஒதுக்கீடு விவகாரத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு தருவதாக மகாராஷ்டிரா மாநில ஏக்நாத் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அறிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சஞ்சய் கெய்க்வாட் மீது மகாராஷ்டிராவின் புல்தானா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இடஒதுக்கீடு தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. காலம் காலமாக இடஒதுக்கீட்டை எதிர்த்து வரும் வலதுசாரிகள், ராகுல் காந்திதான் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசிவிட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

rahul gandhi shiv sena

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சிதான் தோற்கடித்தது. மகாராஷ்டிராவில் மராத்தா, தங்கர்கள், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் இடஒதுக்கீடு கோரி போராடி வருகின்றன. ஆனால் காங்கிரஸும் ராகுல் காந்தியும் இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என பேசுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி 400 ஆண்டுகாலம் நமது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. ஆகையால்தான் ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் ரூ.11 லட்சம் பரிசு தருகிறேன் என்றார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அதுல் லோண்டே கூறுகையில், சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர் சஞ்சய் கெய்க்வாட். ஆகையால்தான் போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்றார். இதனடிப்படையில் புல்தானா போலீசார் சஞ்சய் கெய்க்வாட் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்துள்ள சஞ்சய் கெய்க்வாட் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர்; தாம் புலியை வேட்டையாடி புலி பல்லை அணிந்திருப்பதாக கூறி வசமாக சிக்கிக் கொண்டவர். சஞ்சய் கெய்க்வாட்டின் காரை போலீசார் ஒருவர் கழுவும் வீடியோ வெளியாகியும் சர்ச்சையில் சிக்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+