மகாராஷ்டிர அரசியல் குழப்பம்.. பின்னணியில் பாஜக உடன் இருந்த அதானி? அஜித் பவாரால் வெடித்த சர்ச்சை!
மும்பை: கடந்த 2019ம் மகாராஷ்டிர தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சியை அமைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது பாஜக தலைவர் அமித் ஷா உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும் அப்போது தொழிலதிபர் கவுதம் அதானியும் உடன் இருந்ததாகவும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் நேர்காணல் ஒன்றில் கூறியது சர்ச்சையானது. இந்தச் சூழலில் அஜித் பவார் இது தொடர்பாக முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா மற்றும் காங்கிரஸ்- என்சிபி இடையே போட்டி நிலவியது. அந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை.

அதேநேரம் முதல்வர் பதவி குறித்து பாஜக சிவசேனா இடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதில் இரு தரப்பிற்கும் இடையே இழுபறி நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி கூட அமல்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா: அப்போது திடீரென 2019, நவ.23ம் ஆண்டு தேதி காலை தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார். பாஜகவும் என்சிபி கட்சியும் இணைந்து ஆட்சியை அமைப்பதாகத் தகவல் வெளியானது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், என்சிபி கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அந்த கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்கவில்லை. என்சிபி நிறுவனர் சரத் பவார் இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து வெறும் 5 நாட்களில் அந்த அரசு கவிழ்ந்தது.
அப்போது என்ன நடந்தது என்பது குறித்து அஜித் பவார் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றே சர்ச்சையாக மாறியது. அதாவது அப்போது டெல்லியில் கூட்டணி தொடர்பாக பல்வேறு தொடர்ச்சியாகப் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்ததாகவும் அதில் அமித் ஷா உடன் தொழிலதிபர் கவுதம் அதானியும் கலந்து கொண்டதாகக் கூறியிருந்தார்
பரபர பேச்சு: அதாவது அந்த நேர்காணலில் அஜித் பவார், "இவை எல்லாம் நடந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. டெல்லியில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நடந்தது. இது எல்லாருக்கும் தெரியும். அப்போது மொத்தம் 5 மீட்டிங் நடந்தன. எல்லோரும் அங்கே இருந்தார்கள்.
மீண்டும் சொல்கிறேன். அமித் ஷா, கவுதம் அதானி, பிரபுல் படேல், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சரத் பவார் ஆகியோர் அங்கு இருந்தார்கள். எல்லாம் பேசி முடிவெடுத்தோம். ஆனால், திடீரென என் மீது பழி போட்டனர். வேறு வழியில்லாமல் நான் பழியை ஏற்றுக்கொண்டேன்.. மற்றவர்கள் தப்பித்துக் கொள்ள என்னைப் பலிகடா ஆக்கினார்" என்று கூறியதே சர்ச்சைக்குக் காரணமாகும்.
கேள்வி: அரசியல் கூட்டணி குறித்த கூட்டத்தில் கவுதம் அதானி ஏன் இருக்கிறார் என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பினர். 2022ல் சிவசேனா கட்சியும், கடந்தாண்டு என்சிபி கட்சியும் இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், அதிலும் கூட கவுதம் அதானிக்கு பங்கு இருக்கலாம் என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்தனர். இதற்கிடையே அஜித் பவார் தனது பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார்.
விளக்கம்: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், "நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. கவுதம் அதானிக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.. நான் சொல்வதைத் தவறாகப் பரப்பி வருகிறார்கள். அதானி ஒரு தொழிலதிபர். அவருக்கும் அரசியலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை" என்றார்.
மேலும், மற்றொரு நேர்காணலில் அவர், "நான் சரத் பவார் சொல்லியே பாஜக உடன் கூட்டணி குறித்துப் பேசினேன்.. பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டேன். ஆனால், கடைசியில் சரத் பவார் தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என நகர்ந்துவிட்டார். உண்மையில் சரத் பவார் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது.. அவரது மனைவிக்கும் தெரியாது.. மகளுக்கும் தெரியாது" என்றார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications