7 பெரிய கட்சிகள் போட்டியிலிருந்தாலும்.. மகாராஷ்டிர அரசியல் சிம்பிளா புரியனுமா.. ஒரு வடா பாவ் போதும்!
மும்பை: மகாராஷ்டிராவில் இந்த சட்டசபை தேர்தல் ஏகப்பட்ட கட்சிகளால் கதி கலங்கிப்போயுள்ளது. முன்பெல்லாம், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாஜக, சிவசேனா ஆகிய 4 கட்சிகள்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தின. ஆனால், பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவை கைக்குள் வைத்துக்கொள்ள பாஜக மிகத் தீவிரமாக இருந்தது. இதனால், ஆட்சி மாறியது, காட்சி மாறியது என பல கூத்துக்களை நாம் முன்பு பார்த்திருந்தோம். இதன் விளைவாக இப்போது, சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் உடைந்துவிட்டன.
பாஜக பக்கம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் உள்ளன. இவைதான் இப்போது ஒரிஜினல் என சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆனால், நிஜமாகவே ஒரிஜினலாக இருந்த, உத்தவ் தாக்ரேவின், அதாவது பால்தாக்ரே மகன் நடத்தும் சிவசேனாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இப்போது, ஒரிஜினல் இல்லாத கட்சியாக பார்க்கப்படுகின்றன. எனவே அந்த கட்சிகள் உத்தவ் தாக்ரே சிவசேனா என்றும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் என்றும் பெயர் சூட்டி அழைக்கப்படுகின்றன.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணிகளையும், கட்சி பெயர்களையும் ரொம்பவே ஈஸியாக நினைவில் நிறுத்த, மும்பை நகரின் ஃபேமஸ் டிஷ்சான வடா பாவ் மூலம் விளக்கம்தர நினைத்தோம். அதையும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தின் முன்பாக நின்று விளக்கம் தர நினைத்தோம். அதை நீங்களே வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த வீடியோ மிக மிக சுலபமாக கூட்டணி முடிச்சை அவிழ்க்கும் என்று நம்புகிறோம்.












Click it and Unblock the Notifications