ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார்.. நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை.. அதனால்தான்.. அரசு தரப்பு ஷாக் வாதம்!
உங்களுக்கு ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை, அதனால் ஆளுநர் சுயமான முடிவு எடுத்தார் என்று மகாராஷ்டிரா வழக்கில் பாஜக சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதம் செய்து
மும்பை: உங்களுக்கு ஆளுநர் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை, அதனால் ஆளுநர் சுயமான முடிவு எடுத்தார் என்று மகாராஷ்டிரா வழக்கில் பாஜக சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் விளக்கம் அளிக்க வேண்டும், நாளை காலை இரண்டு கடிதங்களை இது தொடர்பாக அளிக்க வேண்டும் என்று இன்று நடந்த அவசர வழக்கு விசாரணையில் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சிவசேனா - காங். - என்சிபி சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்கள் . அதேபோல் மகாராஷ்டிரா அரசு சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தார், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார்கள். நீதிபதிகள் என்வி ரமணா, அசோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

அரசு வாதம்
மகாராஷ்டிரா பாஜக அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிட்டார். முகுல் ரோத்தகி தனது வாதத்தில், ஒரு பக்கம் நீங்கள் அரசு அமையவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள். இன்னொரு பக்கம் அரசு அமைந்த முறை சரியில்லை என்கிறீர்கள் .

ரோத்தகி வாதம்
நீண்ட நாட்களாக நீங்கள் எதுவும் செய்யவில்லை. அதனால் கவர்னர் ஆட்சி தன்னுடைய முடிவை எடுத்தார். உங்களுக்கு ஆளுநர் நேரம் கொடுத்தார்: நீங்கள் ஆட்சி அமைக்கவில்லை. இதில் ஆளுநர் எங்கும் அவசரப்படவில்லை: எல்லோருக்கும் நேரம் கொடுத்தார். ஆளுநர் முதல்வரை தேர்வு செய்யலாம்: அதை விசாரிக்க முடியாது.

சட்டம் என்ன
சட்டவிதி 361படி ஆளுநரும், குடியரசுத் தலைவர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. என்னுடைய கேள்வி ஒன்றுதான் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட முடியுமா?. உடனடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவு போட முடியுமா?. எங்களுக்கு மூன்று நாள் அவகாசம் வேண்டும்.

நாங்கள் மூன்று
நாங்கள் மூன்று நாட்களுக்கு பின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம். அதற்குள் எதிர்க்கட்சிகள் அவசரப்பட்டுவிட்டார்கள். ஆளுநர் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட கூடாது.2 வருடத்தில் அனைத்து வழக்கையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் சட்டசபை சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? அப்படி நீங்களும் ஆளுநர் முடிவில் தலையிட கூடாது












Click it and Unblock the Notifications